தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தெற்கு கேரளாவை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
கனமழைக்கான மாவட்டங்கள் (ஆகஸ்ட் 6):
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர்.
கனமழைக்கான மாவட்டங்கள் (ஆகஸ்ட் 7):
கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் தருமபுரி.
சென்னையில் வானிலை
சென்னையைப் பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
ஆகஸ்ட் 6 முதல் 9ஆம் தேதிவரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரபிக் கடல், தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.