K U M U D A M   N E W S

சென்னையில் தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு 110 விழுக்காட்டிற்கு மேல் அதிகரிக்க வாய்ப்பு!

சென்னையில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு 110 விழுக்காட்டிற்கு மேல் அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.

இன்றும் ரெட் அலர்ட்.. 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

கடந்த 24 மணி நேரத்தினை பொறுத்தவரை நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தென்காசி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ள நிலையில் இன்றும், 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆட்டத்தை காட்டும் தென்மேற்கு பருவமழை- தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

தென்மேற்கு பருவமழை கேரளாவில் முன்கூட்டியே தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் முன்கூட்டியே தொடங்கும் பருவமழை: 24 மணி நேரத்திற்குள் தொடங்க வாய்ப்பு!

கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் தென்மேற்குப் பருவ மழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குடை ரெடியா இருக்கா? இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த இரண்டு தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ள நிலையில் தமிழகத்திலும் இதன் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில், இன்றைய தினம் கோவை,நீலகிரி உட்பட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.