ஐபிஎல் 2025

விரக்தியில் சிஎஸ்கே ரசிகர்கள்...ஆர்வம் காட்டாததால் டிக்கெட் விற்பனை மந்தம்

சிஎஸ்கே தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியை சந்தித்து உள்ளதால் ஹைதராபாத் அணி உடனான போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது.

விரக்தியில் சிஎஸ்கே ரசிகர்கள்...ஆர்வம் காட்டாததால் டிக்கெட் விற்பனை மந்தம்
சென்னை சூப்பர் கிங்ஸ்
CSK vs SRH

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஏப்.25ம் தேதி இரவு 7:30 மணிக்கு நடைபெற உள்ளது.

சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறும் 5வது ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று தொடங்கியது. சரியாக இன்று காலை 10:15 மணியில் இருந்து இணைய தளத்தின் வாயிலாக டிக்கெட்டுகள் முன்பதிவு நடைபெற்று வருகிறது. ரூ.1700 முதல் ரூ.7,500 வரை டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.
அதிகபட்சமாக ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே 8 போட்டிகளில் 6 தோல்வியும், 2ல் வெற்றியும் பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

டிக்கெட் விற்பனை மந்தம்

சிஎஸ்கே தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியை சந்தித்து உள்ளதால் ஹைதராபாத் அணி உடனான போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. இதன்காரணமாக டிக்கெட் விற்பனை மந்தமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக சிஎஸ்கேவின் ஆட்டத்தை காண சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.