CSKvsSRH
ஐபிஎல் 2025 தொடரில் 43வது லீக் போட்டியில் ஹைதராபாத் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொண்டு விளையாடி வருகிறது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஐபிஎல் 2025 தொடரில் புள்ளிப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி இடத்தில் உள்ளது.
ஆகையால் இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது. இந்த தொடரில் 8 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் கடைசி இடத்தில் உள்ள சிஎஸ்கே, 8 போட்டிகளில் ஆறு தோல்களுடன் 9வது இடத்தில் உள்ள ஹைதராபாத் அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.
அஜித்குமார், சிவகார்த்திகேயன்
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்த போட்டியை நடிகர் அஜித்குமார், ஷாலினி, அவரது மகள் மற்றும் மகன் நேரில் கண்டு ரசித்தனர். அதேப்போல் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோரும் போட்டியை கண்டு ரசித்தனர்.
நடிகர் அஜித்தின் வருகையால் சேப்பாக்கம் ஸ்டேடியமே ரசிகர்களின் சத்தத்தில் சற்று நேரம் அதிர்ந்தது. ரசிகர்களை பார்த்து நடிகர் அஜித்குமார் கையசைத்தார்.இதைத்தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 ஓவர்களூக்கு 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 119 ரன்களுடன் விளையாடி வருகிறது. அதிகபட்சமாக சென்னை அணியில் டேவால்ட் ப்ரேவிஸ் 25 பந்துகளுக்கு 42 ரன்கள் எடுத்தார். இதேப்போல் ஆயுஸ் மத்ரே 19 பந்துகளுக்கு 30 ரன்கள் எடுத்தார்.