ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று 2 லீக் போட்டிகள் நடைபெற்றது. இதில் ஐபிஎல் தொடரின் 2வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களமிறங்கியது.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய பிரயான்ஸ் ஆர்யா 103 ரன்களும், ஷசாங்க் சிங் 52 ரன்களுடனும், மார்கோ ஜான்சன் 34 ரன்களுடனும் அடித்து அசத்தினர்.
220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில், ரவீந்திரா 36 ரன்களும், ருதுராஜ் 1 ரன்னும், துபே 42 ரன்களும், கான்வே 69 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தோனி 27 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தொடர்ந்து தனது 3 வெற்றியை பதிவு செய்தது. சென்னை இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 4-ல் தோல்வியையும் ஒன்றில் வெற்றியையும் பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
ஐபிஎல் 2025
தொடர் தோல்வியில் CSK.. பிரியான்ஸ் ஆர்யா அதிரடி.. பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி!
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் சண்டிகரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.