K U M U D A M   N E W S
Promotional Banner

அரசு

Jagdeep Dhankhar resigns: குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா

குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக குடியரசுத் தலைவர் திரெளதிபதி முர்முவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

சிறார்கள் பாதுகாப்பு: அரசு மற்றும் தனியார் பராமரிப்பு இல்லங்களில் கண்காணிப்பு தீவிரம்!

அரசு மற்றும் தனியார் சிறார்கள் பராமரிப்பு இல்லங்களில், பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தவிர்க்க, தாம்பரம் மாநகர காவல்துறை, கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

பஞ்சாப் அரசு அதிரடி நடவடிக்கை: குழந்தை கடத்தல் கும்பலுக்குச் செக்!

பஞ்சாப் மாநிலத்தின் தெருக்களில் யாசகம் பெறும் குழந்தைகளுக்கும் அவர்களுடன் உள்ள பெரியவர்களுக்கும் டி.என்.ஏ பரிசோதனை செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. யாசகம் செய்வோர் உண்மையிலேயே குழந்தையின் ரத்த உறவா என அறியவே சோதனையெனத் தகவல் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர் திருமணப் பதிவுக்கு ஏற்பாடு.. தமிழக அரசு நடவடிக்கை!

தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்போரின் திருமணப் பதிவுகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நிலையில் அவற்றைப் பதிவு செய்ய, தமிழக அரசு சிறப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. தம்பதியினரின் திருமணங்களை பதிவு செய்ய வரும் 26ம் தேதி சனி அன்று சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களை செயல்பாட்டில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

போராட்டத்தால் மாணவர்கள் பாதிப்பு: ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக- அன்புமணி

பழைய ஓய்வூதியத் திட்டம், அரசாணை 243 ரத்து உள்ளிட்ட ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

குடியிருப்பு உரிமையை பாதுகாக்க வேண்டும்- சிபிஎம் வலியுறுத்தல்

நீதிமன்ற தீர்ப்புகள் குடிசைகளை குறிவைக்கப்படும் நிலையில், மக்களின் குடியிருப்பு உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.

தொழிலதிபர்களின் முகவரா திமுக அரசு? அன்புமணி கேள்வி

பொதுமக்களின் வீடுகளையும், காடுகளையும் அழித்து விட்டு தான் தொழிற்சாலை அமைக்க வேண்டுமா ? என்று கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ், தொழிலதிபர்களின் முகவராக திமுக செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

‘கமிஷன், கலெக்சன்’.. திமுகவின் தாரக மந்திரம்- இபிஎஸ் விமர்சனம்

“கமிஷன், கலெக்சன் மட்டும்தான் திமுகவின் தாரக மந்திரம்” என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

RCB வெற்றிக்கொண்டாட்ட விவகாரம்: கர்நாடக கிரிக்கெட் வாரியத்திற்கு சிக்கல்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி சமீபத்தில் நடத்திய வெற்றிப் பேரணி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. முறையான திட்டமிடல் இல்லாமல் பேரணிக்கு ஏற்பாடு செய்ததன் விளைவாக ஏற்பட்ட அசம்பாவிதங்கள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள்குறித்து கர்நாடக அரசு தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

அரசு பேருந்து மீது ஏறி ஆட்டம் போட்ட இளைஞர்கள்.. கதறவிட்ட ஓட்டுநர்

காமராஜர் பிறந்தநாள் விழாவின்போது, அரசுப் பேருந்து மீது ஏறி ஆட்டம் போட்ட இளைஞர்களை, ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் ஓட்டிச் சென்று கீழே இறக்கிவிட்டார்.

சுகாதாரத்துறை முற்றிலும் செயலிழந்துவிட்டது- டிடிவி தினகரன் விமர்சனம்

நோய்களைக் குணப்படுத்த வேண்டிய அரசு மருத்துவமனைகளே நோய்களை உற்பத்தியாக்கும் மையமாகச் செயல்படுவதா? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நதிநீர் பாதுகாப்பு நடவடிக்கை.. 8 வாரங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

கூவம், அடையாறு நதிகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை எட்டு வாரங்களில் முழுமையாக அகற்றும்படி தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

நகை திருட்டு வழக்கு - காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

92 சவரன் நகை திருட்டு வழக்கில் முறையாக விசாரணை செய்யாத காவல் உதவி ஆணையரை பணியிடை நீக்கம் செய்ய தமிழக டி.ஜி.பிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசின் திட்டங்கள் நேரிடையாக பொதுமக்களின் இல்லங்களில்.. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்!

அரசுத் துறைகளின் சேவைகளை, மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் முகஸ்டாலின் அவர்கள் சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார்

அனைவரையும் வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா? நயினார் நாகேந்திரன் கேள்வி

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

உணவளிக்கும் கடவுள்கள் மீதான அக்கறை இதுதானா? அன்புமணி கேள்வி

உழவர்களின் நலன்கள் தொடர்பாக வாக்குறுதிகளில் 5% கூட நிறைவேற்றாத திமுக அரசு, உணவு படைக்கும் கடவுள்களான உழவர்கள் மீது காட்டும் அக்கறை இவ்வளவு தானா? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக-வினரின் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது- நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

மக்கள் நலனை முன்னிறுத்தி போராடும் பாஜக-வினரின் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது” என்று நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

“பெரிய நகைச்சுவையாகப் பார்க்கப்படுகிறது...” விஜய் குற்றச்சாட்டுக்கு கனிமொழி எம்.பி., பதில்

முதலமைச்சர் ஸ்டாலின் காவிக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறார் என்று நடிகர் விஜய் குற்றஞ்சாட்டியது குறித்த கேள்விக்கு, கனிமொழி எம்.பி. பதிலளிக்காமல் நழுவிச் சென்றார்.

திமுகவின் ஃபெயிலியர் ஆட்சி… எல்.முருகன் விமர்சனம்

திமுக ஆட்சி ஃபெயிலியர் ஆட்சி என்றும் இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் மீது பாசமா? அன்புமணி கேள்வி

ஆன்லைன் சூதாட்டத்திற்கு 91 பேரை பலி கொடுத்தும் இன்னும் தடை செய்ய மறுப்பது ஏன்? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெளிநாட்டுக் கைதிகளுக்கு சிறப்புச் சலுகைகள்… விசாரணை நடத்த டிடிவி தினகரன் வலியுறுத்தல்

வெளிநாட்டுக் கைதிகளுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுவதாக எழுந்திருக்கும் புகார் மீது தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

‘ப’ வடிவில் இருக்கைகள்: கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்? அன்புமணி விமர்சனம்

‘ ப’ வடிவில் இருக்கைகளை அமைப்போம் என்பதெல்லாம் கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்? என்பதற்கு இணையான நகைச்சுவையாகவே அமையும்” என்று அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்க வேண்டும்.. சீமான் வலியுறுத்தல்

"தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட வேண்டும்” என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

லிஸ்ட் பெருசா போகுது.. ரூ.85 ஆயிரத்துக்கு நொறுக்குத்தீனி சாப்பிட்ட அரசு அதிகாரிகள்!

மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமத்தில் நடந்த பஞ்சாயத்து கூட்டத்தில் நொறுக்கு தீனிக்காக ரூ.85 ஆயிரம் செலவிடப்பட்டதாக வெளியான கணக்கு பட்டியல் இணையத்தில் வைரலாகிறது.