காவல்துறை உயர் அதிகாரிகளைக் காப்பாற்ற முயற்சியா? அண்ணாமலை கேள்வி
காவலாளி அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில், காவல்துறை உயர் அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
காவலாளி அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில், காவல்துறை உயர் அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
சிவகங்கை அருகே கோயில் காவலர் அஜித்குமார் காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வரும் 3ஆம் தேதி தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் சிறு கடைகளில் லஞ்சம் கேட்டு மிரட்டும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் சி.சி.டி.வி காட்சிகள், பணம் கேட்கும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வணிகர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போதைப் பொருட்கள் இன்றைக்கு கிராங்களில் கிடைக்கும் அளவில் வேரூன்றி விட்டது. இதனால் மக்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி உள்ளது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாடல்
திருப்புவனம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல்
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்றும் தாடி பாலாஜி வலியுறுத்தல்
தமிழகத்தில் புதிய மாவட்டங்களை டிசம்பர் மாதத்திற்குள் அமைத்து முடிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மாநிலம் முழுவதும் மொழிக்கொள்கை அமல்படுத்தும் விதத்தை ஆய்வு செய்ய புதிய வல்லுநர் குழுவை அமைக்கும் முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது.
அடுத்த கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளது பரந்தூர் பசுமைவெளி விமான நிலையத் திட்ட எதிர்ப்பு குழு
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்பது மிகப்பெரிய வரப்பிரசாதம் என அமைச்சர் சேகர்பாபு பேட்டி
காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணத்தில் தவறிழைத்த காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என தவெக வலியுறுத்தியுள்ளது.
தமிழர்களை வஞ்சித்துக் கொண்டிருக்கும் திராவிடமாடல் அரசுக்கு எதிராக தமிழ்நாடு மக்கள் பேரணியாக திரளப் போவதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
“தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள காலை உணவு திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டினால் மட்டும் போதாது, அதை முறையாகவும் செயல்படுத்த வேண்டும்” என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
“என் பையனின் முடிவுகளை அவனே எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். கதை கேளு என்றேன், அதன் பிறகு அதைப்பற்றி நான் எதுவுமே பேசவில்லை” என்று நடிகர் விஜய் சேதுபதி கூறினார்.
“நிலத்தடி நீருக்கான வரி விதிக்கும் முடிவை மத்திய நீர்வளத்துறை கைவிட வேண்டும்” என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையமான (NHAI) இன்று விளக்கம் அளித்துள்ளது.
வருவாய்த்துறையினர் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிப்படைவதாகவும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற திமுக அரசு முன்வர வேண்டும்” என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
நேரு அருங்காட்சியத்தில் இருந்து சோனியா காந்தி பெற்று சென்ற நேருவின் கடிதங்களை அவரிடம் இருந்து திரும்ப பெற சட்ட நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் போதைப் பொருள் வழக்கில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்தை கைது செய்த போலீசார் தீவிர அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அரசு பேருந்து விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், புதிய பேருந்துகள் வாங்க ஒதுக்கப்படும் நிதி எங்கே செல்கிறது என்ற கேள்வி எழுவதாகவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அடிப்படைச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல், முதல்வர் மருந்தகங்களில் தற்போது மாவு விற்பனை செய்யும் நிலைக்குத் மருந்தக உரிமையாளர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசு விழாக்கள், நிகழ்ச்சிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட விழாவின் ஏற்பாட்டாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை கொண்டு வரவுள்ளது. பெங்களூருவில் ஆர்சிபி அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மாநில அரசு நடவடிக்கை எடுக்கக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் மற்றும் மத கூட்டங்களுக்கும் இந்த தண்டனை பொருந்தும் என சட்ட முன்வடிவில் கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்து உளவுத் துறையின் MI6-க்கு தலைவராக முதல்முறையாக பிளேஸ் மெட்ரெவேலி என்ற பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டன் அரசு உளவுத்துறைக்கு ஒரு பெண் தலைவரை நியமிக்கப்படுவது வரலாற்றுச் சாதனையாக பார்க்கப்படுகிறது.
குரூப்-1, 1ஏ முதல் நிலை தேர்வு முடிவுகள் இரண்டு மாதங்களில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.