K U M U D A M   N E W S

திமுக அரசுக்கு அவமானமாக இருக்காதா?...தொடர் கொலைகள் – இபிஎஸ் கண்டனம்

தன் நேரடி கட்டுப்பாட்டில் சட்டம் ஒழுங்கு இருப்பதாக போட்டோஷூட் வசனம் பேசியதை நினைவிற்கொண்டு, அந்த இரும்புக்கரத்தின் துரு நீக்கி இனியேனும் செயல்படுத்த வேண்டுமென வெற்று விளம்பர திமுக மாடல் அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்

CM Rangasamy | பாண்டிச்சேரியில் புது ரூல்ஸ் அமல்.. அறிவித்த முதல்வர் | Tamil Compulsory | Puducherry

அரசு அழைப்பிதழ்களில் தமிழ் கட்டாயம் இடம்பெற வேண்டும் முதலமைச்சர் ரங்கசாமி

பெரியார் குறித்த சர்ச்சைப் பேச்சு- சீமான் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்கக்கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிசய வாழைத்தார்.. தாலி கட்டி,பொட்டு வச்சு செல்பி எடுக்க திரளும் பக்தர்கள்

நாகையில் வாழைப்பூ கீழிருந்து மேல்நோக்கி வளர்ந்து பார்ப்பதற்கு ஐந்து தலை நாகம் போல இருப்பதால் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் அந்த வாழைத்தாரை ஆச்சரியத்துடன் பார்த்து செல்லுகின்றனர்.

சொத்து வரி கட்டாத கடைகளுக்கு குப்பைத் தொட்டியால் நெருக்கடி- மழுப்பும் மாநகராட்சி!

மதுரை மாநகராட்சியில் சொத்துவரியினை நீண்ட காலம் பாக்கி வைத்துள்ள வணிக கட்டிடங்கள், வீடுகள் முன்பு குப்பை தொட்டியினை வைத்து கட்டிட உரிமையாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கையை மாநகராட்சி ஊழியர்கள் தொடங்கியிருக்கிறார்கள்.

1521 கோடி.. 1222 வழக்கு.. பதிவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்!

தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தியதற்கு,  ஆயிரத்து 521 கோடியே 83 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டியுள்ளதாகவும், இது சம்பந்தமான உத்தரவுகளை அமல்படுத்தக் கோரி ஆயிரத்து 222 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

குளிக்க சென்ற பெண்ணை துரத்திய கரடி- திணறும் வனத்துறை அதிகாரிகள்!

நாங்குநேரி அருகே குளிக்க சென்ற பெண்ணை கரடி துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களை அச்சுறுத்தி வரும் கரடியை வனத்துறையினர் விரைந்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

வெள்ளாடு வளர்ப்பில் பிசினஸ் பண்ண ஆசையா? சூப்பர் வாய்ப்பு காத்திருக்கு..

வெள்ளாடு வளர்ப்பு குறித்த பயிற்சியில் ஈடுபட விரும்புவோர் வருகிற 21.03.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

3-வது கார் வாங்க போறவங்களுக்கு சிக்கல்: டெல்லி எடுக்கப்போகும் அதிரடி முடிவு

தனிநபர்கள் வாங்கும் மூன்றாவது கார் இனி மின்சார வாகனமாக தான் இருக்க வேண்டும் என டெல்லி அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இறுதிக்கட்டத்தை எட்டிய அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய விவகாரம்!

அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியதாக கைது செய்யப்பட்டவரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

தொடை நடுங்கி திமுக.. போலீஸ் வலையில் பாஜகவினர்- அண்ணாமலை கண்டனம்!

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக போராட்டம் நடத்த முயன்ற பாஜகவினர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், தொடைநடுங்கி திமுக அரசு என தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.

வீட்டு வாசலில் குவிந்த போலீசார்..தமிழிசை உட்பட பாஜகவின் முன்னணி தலைவர்கள் கைது

பாஜக சார்பில் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக இன்று போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். இதற்கு காவல்துறையினர் அனுமதி வழங்காத நிலையில், பாஜகவின் முன்னணி தலைவர்கள் வீட்டின் முன் இன்று காலை முதலே போலீசார் குவிந்து வந்த நிலையில் தமிழிசை கைது செய்யப்பட்டுள்ளார்.

கிராம வங்கியில் கொள்ளை முயற்சி.. அலாரத்தால் தப்பிய கொள்ளையர்கள்..!

அருப்புக்கோட்டையில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியில் அதிகாலை நேரத்தில் ஜன்னல் கம்பியை அறுத்து வங்கியின் உள்ளே நுழைந்து கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. அப்போது வங்கியில் அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மொழிக் கொள்கையின் உறுதியைக் காட்டவே “ரூ” குறியீடு - முதலமைச்சர் விளக்கம்..!

தமிழ்நாடு சட்ட்ப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இந்திய ரூபாய் குறியீட்டுக்கு பதில் தமிழ் எழுத்து ‘ரூ’-வை அச்சிட்டது ஏன் என்பது குறித்தும், பட்ஜெட் வெளியீட்டிற்கு பின்னர் வெளியான நிலவரம் குறித்தும் “இது பட்ஜெட் பற்றிய உங்களில் ஒருவன்!” என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு பட்ஜெட்.. பிரேமலதா சொன்ன எதிர்பாரா பதில்

"தேமுதிகவின் தேர்தல் அறிவிப்புகளே பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்தது

தமிழகத்தில் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் - வேல்முருகன் பேட்டி

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது இருப்பினும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது அதற்கு சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். 

ஆசை ஆசையாய் காத்திருந்த மக்களுக்கு அதிகாலையே ஏமாற்றம் !

சூரிய உதயத்திற்காக ஆசை ஆசையாய் காத்திருந்த மக்களுக்கு அதிகாலையே ஏமாற்றம்.

சிக்கன், மட்டன் பிரியாணியுடன் விடிய விடிய நடைபெற்ற சஹர் விருந்து

ரமலானை முன்னிட்டு, கோவை செல்வபுரத்தில் விடிய விடிய நடைபெற்ற சஹர் விருந்து

"ஓடாத வண்டியை பட்டி, டிங்கரிங் பார்த்தது போல் இருந்தது" - சி.வி.சண்முகம்

"தமிழக பட்ஜெட் - மக்களை ஏமாற்றுகிற வேலை"

"சில வேடிக்கை மனிதர்களைப் போல நான் விழுந்து விட மாட்டேன்" - செங்கோட்டையன்

என் பாதை தெளிவானது - செங்கோட்டையன்

இந்தி மொழி படித்தால் கட்டிட வேலைகளை தான் செய்ய வேண்டும்- எ.வ‌.வேலு விமர்சனம்

இந்தி படித்த அனைவரும் தமிழ்நாட்டில் கட்டிட வேலை, பெயிண்ட் வேலை, தார் சாலை அமைக்கும் வேலை உள்ளிட்ட பணிகளை செய்து வருவதாக அமைச்சர் எ.வ.வேலு விமர்சித்துள்ளார்.

24 ஆண்டுகளுக்கு பிறகு பிடிப்பட்ட ரவுடி.. அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய போலீசார்

24 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த வடசென்னையின் பிரபல ரவுடியை ஆந்திராவில் வைத்து தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடிசை வீடு.. அப்பாவுக்கு யானைக்கால் நோய்.. பள்ளி மாணவிக்கு உதவிக்கரம் நீட்டிய தஞ்சை MP

ஏழ்மை நிலையிலுள்ள பள்ளி மாணவிக்கு நேரில் சென்று அவருக்கு வேண்டிய உதவிகளை செய்ததோடு, உயர்கல்விக்கான முழு செலவையும் ஏற்றுக்கொள்வதாக தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் உறுதியளித்துள்ளார்.

போலீஸை கண்டதும் லஞ்சம் வாங்கிய பணத்தோடு குளத்தில் குதித்த விஏஓ.. அப்புறம் என்னாச்சு?

வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கிய விஏஓ குளத்தில் குதித்து தப்ப முயன்ற சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

கர்ப்பிணி மனைவிக்கு மருந்து வாங்கி கொடுக்க முடியாததால் பூசாரி தூக்கிட்டுத் தற்கொலை

அதிக கடன் சுமையினால் தனது நிறைமாத கர்ப்பிணிமனைவிக்கு மருந்து மாத்திரை வாங்கி கொடுக்க முடியாததால் மனமுடைந்த கோவில் பூசாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.