பரமு, செல்பிஷ் படங்களை இயக்கிய மாணிக் ஜெய் இயக்கத்தில் மூன்றாவதாக உருவாகியுள்ள படம் ‘கைமேரா’. இத்திரைப்படத்தில் அறிமுக நாயகனாக LNT எத்திஷ் நடிக்கிறார். மாறுபட்ட வேடங்களில் தாரை கிருஷ்ணன், ரஞ்சித் குமார் மற்றும் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் மாணிக் ஜெய் நடித்துள்ளனர். கதையின் நாயகிகளாக சௌமியா, கிருஷ்ண நந்து, ஞானேஸ்வரி உள்ளிட்ட மூன்று பேர் நடித்திருக்கின்றனர்.
மனித உடம்புக்குள் மிருகங்களின் செல்கள் புகுத்தப்பட்டால், மனிதனின் குணம் மிருக குணமாக மாறினால் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகியுள்ளது. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ‘கைமேரா’ விரைவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்று இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.
விக்னேஷ் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார், இயக்குநர்கள் சங்க பொதுச்செயலாளர் பேரரசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு இசைத்தட்டை வெளியிட்டனர்.
நான் நினைத்ததை விட நன்றாக நடித்திருக்கிறார்: இயக்குநர் மாணிக் ஜெய்
இந்த நிகழ்வில் பேசிய தயாரிப்பாளரும் இயக்குநருமான மாணிக் ஜெய் பேசும்போது, “கைமேரா’ படத்தில் நடிகர் எத்திஷ் நான் நினைத்ததை விட நன்றாக நடித்திருக்கிறார். சௌமியா கிருஷ்ணா நந்து இருவருமே போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நேரடியாக எடுக்கப்பட்டது தான். சில நடிகர்கள் மட்டுமே பெங்களூரில் இருந்து இதில் நடித்திருக்கிறார்கள்” என்று கூறினார்.
தமிழில் இருந்து உருவானது கன்னடம்: இயக்குநர் பேரரசு
இயக்குநர் பேரரசு பேசுகையில், “படத்தின் ஹீரோவுக்கு கன்னடத்தில் பேசுவதா, தமிழில் பேசுவதா, கன்னடம் பேசினால் தப்பாக போய்விடுமா என கொஞ்சம் குழப்பம் இருந்ததை பார்க்க முடிந்தது. தமிழ்நாட்டில் நீங்கள் எதை வந்து பேசினாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். எங்களுக்கு மொழி ஒரு பிரச்சனை இல்லை. திறமையை தான் பார்ப்போம்.
உலகத்தின் முதல் மொழி தமிழ் தான். அதிலிருந்து தான் தெலுங்கு போனது, மலையாளம் உருவானது. இதிலிருந்து தான் கன்னடம் உருவானது என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். இதை நாங்கள் நம்புகிறோம். கன்னடம் வேறு, தமிழ் வேறு என்றால் ஓகே. நாங்கள் எந்த விவாதமும் பண்ண மாட்டோம்.
இன்று போதைப் போல் கலாச்சாரம் அதிகமாகி விட்டது. நாட்டில் யாராவது தண்ணி அடித்து விட்டு விழுந்து கிடந்தால் அது சாதாரண விஷயம். ஒரு சினிமாக்காரர் அப்படி இருந்தால் அங்கு ஒரு தேசிய பிரச்சினையாக மாறிவிடும். நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்தியதாக கைதாகி இருக்கிறார். அந்த பழக்கத்தில் இருந்தது தவறுதான். கைதானதும் சரியான விஷயம் தான்.
ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு பெண்ணை வன்கொடுமை செய்த நபரின் முகத்தை யாருக்காவது காட்டினார்களா ? திருப்புவனம் காவல் நிலைய சம்பவத்தில் ஈடுபட்ட அந்த குற்றவாளி காவலர்களின் முகத்தை எங்கேயாவது காட்டி இருக்கிறார்களா ? யாருக்காவது ஞாபகம் இருக்கிறதா ? ஆனால் ஒரு நடிகரை தீவிரவாதியை போல சித்தரிப்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது. கோடிக்கணக்கில் போதை பொருளை விற்றவன் புகைப்படம் கூட இப்படி வந்ததில்லை. அதனால் சினிமாக்காரர்கள் இப்படி நாம் ஒரு தவறு செய்தால் நம்மை ஒரு தேசத்துரோகிகள் போல இந்த உலகத்தில் காட்டி விடுவார்கள் என்பதை உணர்ந்து உஷாராக இருக்க வேண்டும். ஆனால் தேசத்துரோகம் பண்ணியவர்களை அப்படி காட்ட மாட்டார்கள்” என்றார்.
பல மொழிப் படங்கள் எடுத்த ஊர் சென்னை: இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்
இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “மொழியை ரொம்ப ஆழமாக எடுத்துக்கொண்டு நாம் சண்டையிட்டுக்கொள்ள வேண்டியதில்லை. மொழியை மீறின ஒரு உணர்வுதான் கலை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், நான்கு மொழிப் படங்களும் எடுத்த ஊர் தான் இந்த சென்னை.
பெரும்பாலும் இன்றைய காலகட்டத்தில் பெரிய ஹீரோக்களுக்கே அவர்களுடைய கதையை கேட்டதாக தெரியவில்லை. எங்களை எல்லாம் டார்ச்சர் பண்ணி என்ன கதை கரெக்டா சொல்லுங்க என்று கேட்டுட்டு இருந்தாங்க. நூறு கோடிக்கு மேல் சம்பளம் வாங்க ஆரம்பித்த பிறகு கதை கேக்குறதையே விடிவிட்டார்கள்” என்றார்.