தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம்வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். கடந்தாண்டு இவரது நடிப்பில் வெளியான 'அமரன்' படம் பெரும் வெற்றியை பெற்றது. இதனைத்தொடர்ந்து அவர், இயக்குநர் சுதா கொங்காரா இயக்கும் 'பராசக்தி' படத்தில் நடித்து வருகிறார். காரைக்குடியில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் நடைபெற்றன. இந்த படத்தில், அதர்வா, ஜெயம் ரவி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து அவர், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' படத்திலும் நடித்து முடித்துள்ளார். இது சிவகார்த்திகேயனின் 23 வது படமாகும். இந்த படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த பிறகு, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். முன்னதாக வெங்கட் பிரபு - விஜய் கூட்டணியில் வெளியான 'தி கோட்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் சிவகார்த்திகேயன் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மணிகண்டன் நடித்த 'குட் நைட்' திரைப்படத்தை இயக்கிய விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான 'குட் நைட்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், இயக்குநர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயனை நல்ல எதார்த்தமான கதைக்களத்தில் காண முடியும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழின் முன்னணி இயக்குநர்கள் இணையான புஷ்கர் - காயத்ரி சிவகார்த்திகேயனுக்கு கதை சொன்னதாகவும் அது அவருக்கு பிடிக்க முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான ‘ஓரம் போ’ படத்தை இயக்கிய இந்த இணை, 2017 ஆம் ஆண்டு ‘விக்ரம் வேதா’ படத்தை இயக்கி பெரும் வரவேற்பை பெற்றனர். இவர்களுடன் சிவகார்த்திகேயன் இணைத்து பணியாற்ற உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.