கல்விக்கான நிதியை நிறுத்துவது தலைமுறைகளின் முன்னேற்றத்தை தடுக்க முயற்சிப்பதற்கு சமம். எனவே, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அனைத்து நிதியையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எந்தவித நிர்பந்தமும் கிடையாது. மாநில அரசுகள் தங்களுக்கான கல்விக் கொள்கையை வகுத்துக் கொள்ள உரிமையுள்ளது.
எனவே, தேசிய கல்விக் கொள்கையை காரணம் காட்டி 2025-26 ஆம் ஆண்டிற்கு வழங்கப்பட வேண்டிய நிதி ரூ.1800 கோடியை நிறுத்தி வைத்திருப்பது மிகப்பெரிய அநீதியாகும். தமிழ்நாடு மாணவச் செல்வங்களின் கல்வியில் விளையாடும் மத்திய அரசின் இச்செயலுக்கு வன்மையான கண்டனங்களை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த ஆண்டு கல்விக்கான நிதி ரூ.2152 கோடியை இதே காரணம் காட்டி ஒன்றிய அரசு நிறுத்தியது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பிரதமரை சந்தித்து கோரிக்கை வைத்தும், கல்வி அமைச்சர் மற்றும் தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் இணைந்து மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்கப்படவில்லை.
தற்போது இந்தாண்டிற்கான கல்வி நிதியை நிறுத்தி, மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ளமுடியாது. கல்வி என்பது ஒரு நாட்டிற்கான முதன்மை மூலதனம்.
கல்விக்கான நிதியை நிறுத்துவது என்பது தலைமுறைகளின் முன்னேற்றத்தை தடுக்க முயற்சிப்பதற்கு சமமாகும். எனவே, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அனைத்து நிதியையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.