சினிமா

‘பறந்து போ’ Vs ‘3HK’ வசூல் நிலவரம்.. வெளியான தகவல்

‘பறந்து போ’, ‘3BHK’ ஆகிய படங்களின் முதல் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.

‘பறந்து போ’ Vs ‘3HK’ வசூல் நிலவரம்.. வெளியான தகவல்
'3 BHK' vs 'Paranthu po'
இயக்குநர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள பறந்து போ மற்றும் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சரத் குமார், சித்தார்த் நடித்துள்ள 3 BHK ஆகிய திரைப்படங்கள் நேற்று (ஜூலை 4) திரையரங்குகளில் வெளியாகின. இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

‘பறந்து போ’ திரைப்படம்:

கற்றது தமிழ்', 'தங்க மீன்கள்', 'பேரன்பு', 'தரமணி' உள்ளிட்ட வெற்றி படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்தவர் இயக்குநர் ராம். இவரது இயக்கத்தில் உருவானம் படம் 'பறந்து போ'. இந்த படத்தில் மிர்ச்சி சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இந்த படம் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான ஆழமான பாசப்பிணைப்பை வெளிப்படுத்தும் ஒரு கதைக்களத்தில் உருவாகியுள்ளது.

‘3 BHK’ திரைப்படம்:

‘8 தோட்டாக்கள்’, ‘குருதி ஆட்டம்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் ஸ்ரீ கணேஷ். தற்போது, சரத் குமார், தேவயானி, சித்தார்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘3BHK’ படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற நடுத்தர குடுமபத்தின் கனவு பற்றிய கதைக்களத்தில் உருவாகியுள்ளது. ‘சூர்யா வம்சம்’ படத்துக்கு பிறகு சரத் குமார் - தேவயானி ‘3BHK’ படத்தில் இணைத்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வசூல் விவரம்:

இரண்டு திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இரு படங்களின் முதல் நாலா வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘பறந்து போ’ திரைப்படம் ரூ.80 லட்சம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், ‘3 BHK’ திரைப்படம் ரூ.1.5 கோடி வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.