அரசு பள்ளி கழிவறையில் சக மாணவனை கொலை செய்த மாணவன் கைது..!
ராசிபுரத்தில் 9ம் வகுப்பு மாணவனை அடித்துக் கொன்ற சக மாணவனை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராசிபுரத்தில் 9ம் வகுப்பு மாணவனை அடித்துக் கொன்ற சக மாணவனை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறை சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என சீமானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நாளை நடைபெறவிருந்த போரட்டத்திற்கு அனுமதி மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோழி ஆடு கடித்து ஆக்ரோஷமாக சாமி சிலைகளுக்கு முன்னால் பக்தர்கள் காளி, சிவபெருமான், அங்காளம்மன் போன்று பல்வேறு வேடமிட்டு ஆடியவாறு மயான கொள்ளை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
வணிக வளாக கடைகளுக்கான மாத வாடகை ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதிக்குள் செலுத்த தறினால் 12% அபராதம் என்று சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.
சந்தன கடத்தல் வீரப்பனின் உறவினர் அர்ஜூனன் காவல்துறையினர் சித்ரவதை காரணமாக தான் இறந்தார் என்பதற்கு எந்த ஆதாரங்கள் இல்லாத நிலையில் இழப்பீடு கோரிய மனுவை பரிசீலுக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருவாடானை அருகே முனீஸ்வரர் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாயார் தாக்கல் செய்த மனு குறித்து நான்கு வாரங்களில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணைக்காக சீமான் காவல் நிலையத்தில் இன்று (பிப்.27) ஆஜராகத நிலையில், அவரது வழக்கறிஞர் கடிதம் கொடுத்து விளக்கம் அளித்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் ஆட்டம், பாட்டம் என உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை மார்ச் 10-ஆம் தேதி மகிளா நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆஜர்படுத்த உள்ளனர்.
மும்மொழி கொள்கையை செயல்படுத்தினால் தான் நிதி என மத்திய அரசு கூறுவது சிறு பிள்ளைத்தனமானது என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
துபாயில் இருந்து மும்பை வழியாக சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 2.8 கோடி ரூபாய் மதிப்புடைய 3.5 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்க்கு தமிழக பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஒரு பள்ளிக்கு அங்கீகாரம் பெற்றால் போதும், ஒரு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மற்ற பள்ளிகளுக்கு தனியாக அங்கீகாரம் பெற தேவையில்லை என புதிய விதிமுறைகளை சிபிஎஸ்இ அறிவித்திருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று (பிப்.26) மகாபலிபுரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இந்நிகழ்வில் பங்கேற்க 3000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
சென்னை கோடம்பாக்கம் பகுதியில் தனியார் வணிக வளாகத்தில் தீ விபத்து. பெயிண்ட் சேமிப்பு கிடங்கு எரிந்த நிலையில், போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.
போலீஸ் என கூறி நடந்த 20 லட்சம் வழிப்பறி கொள்ளை விவகாரத்தில் தலைமறைவாக இருந்து கைதான வணிகவரித்துறை அதிகாரி நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். மற்றொரு வணிக வரித்துறை அதிகாரியை போலீசார் விடுவித்தனர்.
சென்னையில் இரண்டு கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்ட நிலையில், சாலையில் கத்தியுடன் கல்லூரி மாணவர்கள் ஓடிய 7 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிப்ரவரியில் எழுதும் தேர்வில் மாணவர்கள் பெறுகின்ற மதிப்பெண்ணில் மனநிறைவு கொண்டால் மே மாதம் நடத்தப்படும் தேர்வை அவர்கள் எழுத வேண்டியதில்லை. அவ்வாறு இல்லாத பட்சத்தில் மதிப்பெண்களை உயர்த்த மே மாத தேர்வையும் மாணவர்கள் எழுதலாம் என்று சிபிஎஸ்சி தெரிவித்துள்ளது.
காவல்துறையினர் ஏதோ ஒரு அழுத்தத்தின் காரணமாக தான் தனது மகனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளதாக ஞானசேகரன் தாயார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2020-ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழக அரசு துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக பணியாளர்களை நீக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக் கழகத்தில் துறை தலைவர்கள் நியமனம், தகுதி, திறமை அடிப்படையில் சுழற்சி முறையில் நியமனம் செய்வது தொடர்பாக கொண்டுவரப்பட்ட திருத்தத்தை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.