தென்காசி மாவட்டத்திற்கு ஆக.23ல் உள்ளூர் விடுமுறை.. குஷியான குட்டீஸ்.. காரணம் என்ன?

சங்கர நாராயணசாமி கோவில் குடமுழுக்கை முன்னிட்டு தென்காசி மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Aug 19, 2024 - 17:48
 0
தென்காசி மாவட்டத்திற்கு ஆக.23ல் உள்ளூர் விடுமுறை.. குஷியான குட்டீஸ்.. காரணம் என்ன?
sankarankovil temple kumbabisegam

சங்கர நாராயணசாமி கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி வெள்ளிக் கிழமை தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தென் தமிழகத்தில் மிகவும் பிரபலமாக விளங்கும் சிவ ஸ்தலங்களில் ஒன்று தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் அமைந்துள்ள சங்கர நாராயணர் கோவில்.1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் ராகு கேது பரிகாரத்தலமாகவும் திகழ்கிறது. சங்கரலிங்கம், கோமதி அம்மன், சங்கர நாராயணர் என 3 மூலவர்கள் உள்ள ஆலயம் சங்கரன்கோவில். சிறப்பு வாய்ந்த இந்த கோவிலுக்கு கழுகுமலை, கோவில்பட்டி, தென்காசி, புளியங்குடி, திருநெல்வேலி என சுற்றுவட்டார ஊர்களில் இருந்து மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் அதிகளவில் வருகை தருகின்றனர்.

11 ஆம் நூற்றாண்டில் உக்கிரன் கோட்டையை ஆண்டு வந்த மன்னர் விக்ர பாண்டியனாரால் இந்த கோவில் கட்டப்பட்டது. மதுரையில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வர சுவாமியை வழிபாடு செய்வதற்காக மதுரைக்கு செல்வது வழக்கம். அசிரீரியின் குரல் கேட்டு அவர் மதுரைக்கு செல்லும் வழியில் புன்னை வனக் காட்டை திருத்தி சிவபெருமானுக்கு ஆலயம் அமைத்ததாக கூறப்படுகிறது.

சங்கர நாராயாணசாமி கோவிலில் தான் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவை மறைந்தார் என்றும் கூறப்படுகிறது. சங்கரன் கோவிலில் இருந்து 13 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது நெற்கட்டும் செவல். அந்த பகுதியை ஆண்டு வந்தவர்தான் பூலித்தேவன். ஆங்கிலேயருக்கு எதிராக போர் புரிந்தவர். போரில் வெல்ல முடியாத நிலையில் சூழ்ச்சி செய்து பூலித் தேவரை ஆங்கிலேயர் கைது செய்தனர்.


கைது செய்து அழைத்து வரும் போது சங்கரன் கோவில் அருகே வரும் போது சங்கராநாரயணார் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும் என்று பூலித்தேவர் கூறியுள்ளார். அதற்கு ஆங்கிலேயர்கள் அனுமதித்துள்ளனர். அப்போது கோவிலுக்கு சென்று வழிபட்ட பூலித்தேவர் திரும்பி வெளியே வரவில்லை. கோமதி அம்மபை வணங்கிய அவர் அப்படியே அங்கிருந்து மறைந்துவிட்டதாக நம்பப்படுகிறது.

சங்கரநாராயண சாமி கோவிலில் அவர் மறைந்த இடத்தில் பூலித்தேவர் அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பூலி தேவர் அறை சிவன் சன்னதிக்கும் சங்கரநாராயணன் சன்னதிக்கும் நடுவே அமைந்திருக்கிறது. இது நேர்த்தியான மரங்களினால் கட்டப்பட்டது. சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி கோவில் குடமுழுக்கை முன்னிட்டு தென்காசி மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow