Tirupati Laddu : திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு.. சாட்டை சுழற்றும் சந்திரபாபு நாயுடு.. மறுக்கும் ஜெகன் மோகன்

Andhra CM Chandrababu Naidu on Tirupati Laddu : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை கிடைத்தே தீரும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

Sep 19, 2024 - 11:38
Sep 19, 2024 - 11:59
 0
Tirupati Laddu : திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு..  சாட்டை சுழற்றும் சந்திரபாபு நாயுடு.. மறுக்கும் ஜெகன் மோகன்
chandrababu naidu claims animal fat used in tirupati laddoo

Andhra CM Chandrababu Naidu on Tirupati Laddu : ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதியில் லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக பகீர் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளார்.  சந்திரபாபு நாயுடு திருமலையின் புனிதத்தையும் பல நூறு கோடி இந்துக்களின் நம்பிக்கையையும் கொச்சைப்படுத்தி பேசி உள்ளார் என்று ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர்  காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. 

2019 முதல் 2024 வரையிலான ஒய்.எஸ்.ஆர்.சி.பி ஆட்சியில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. உலகம் முழுக்க மக்களால் மிகவும் மதிக்கப்படும் திருப்பதி லட்டு பிரசாதம்(Tirupati Laddu) தயாரிக்க விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி உள்ளனர்.

திருமலையில் ஏழுமலையான் கோவில்  மிகவும் புனிதமான கோவில்.ஜெகன் நிர்வாகம் திருப்பதி பிரசாதத்தில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். கோடிக்கணக்கான பக்தர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ஜெகன் மற்றும் ஒய்எஸ்ஆர்சிபி அரசை பார்த்து வெட்கப்படுகிறேன் என்று சந்திர பாபு நாயுடு தெரிவித்துள்ளார். 

நாயுடுவின் குற்றச்சாட்டுகளை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கடுமையாக மறுத்துள்ளது.  திருமலையின் புனிதத்தையும் பல நூறு கோடி இந்துக்களின் நம்பிக்கையையும் முதல்வர் சந்திரபாபு நாயுடு கொச்சைப்படுத்தி பேசி உள்ளார். மக்களின் நம்பிக்கையை சேதப்படுத்தி, லட்டுகள் மீதான புனிதத்தை கேவலப்படுத்தி பெரும் பாவம் செய்துள்ளார். திருமலை பிரசாதம் தொடர்பாக நாயுடுவின் கருத்துக்கள் உண்மையிலேயே கேவலமானவை என கூறியுள்ளது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி.

பக்தர்களின் நம்பிக்கையை வலுப்படுத்த, திருமலை பிரசாதம் வழங்கும் விஷயத்தில் நானும், எனது குடும்பத்தினரும் அந்த கடவுளின் சாட்சியாக சத்தியம் செய்ய தயாராக உள்ளோம். நாயுடுவும் குடும்பத்துடன் வந்து சத்தியம் செய்ய தயாரா? என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா உறுப்பினரும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவருமான ஒய்.வி.சுப்பா ரெட்டி விமர்சனம் வைத்துள்ளார். மனிதப் பிறவியில் பிறந்த எவரும் இப்படிப்பட்ட வார்த்தைகளைப் பேசுவதில்லை, இப்படி குற்றஞ்சாட்டுவதில்லை. அரசியலுக்காக எந்த மட்டத்திலும் இறங்கவும் தயங்கமாட்டார் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது என்று கூறியுள்ளார் சுப்பா ரெட்டி.

ஆட்சி மாறிய உடன் காட்சி மாறுவது போல சந்திரபாபு நாயுடு ஆட்சி மாறிய உடன் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகமும் மாறியுள்ளது. TTD சமீபத்தில் பால் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து லட்டுகளில் உள் மதிப்பீடு சோதனையை நடத்தியது. அதில் 'ஸ்ரீவாரி லட்டுகளின்' சுவையை தீர்மானிப்பதில் தரமான நெய் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதைக் கண்டறிந்தது. TTD க்கு சரியான ஆய்வகங்கள் இல்லை, மேலும் தனியார் ஆய்வகங்கள் கடந்த சில ஆண்டுகளாக லட்டுகளின் நெய்யின் தரத்தை சரியாக சோதிக்கவில்லை.

நெய்யின் தரத்தை மதிப்பிடுவதற்காக, TTD சமீபத்தில் ஒரு புதிய உணர்திறன் ஆய்வகத்தை நிறுவியது. மைசூரில் உள்ள அரசு பயிற்சி நிறுவனத்தில் அதன் ஊழியர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் TTD சமீபத்தில் பால் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து லட்டுகளில் உள் மதிப்பீடு சோதனையை நடத்தியது. இதை தொடர்ந்தே லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக பகீர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow