தமிழ்நாடு

தீவிரவாதத்தை உற்பத்தி செய்யும் நாடு பாகிஸ்தான் – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

மீண்டும் இந்தியாவை சீண்டியிருப்பதும், மக்களை கொன்று குவித்திருப்பதற்கும் சரியான பாடம் பெரும் வகையில் இந்தியாவின் நடவடிக்கை இருக்கும்.

 தீவிரவாதத்தை உற்பத்தி செய்யும் நாடு பாகிஸ்தான் – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
தீவிரவாதத்தை உற்பத்தி செய்யும் நாடு

மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 1947 சுதந்திரம் பெற்றதில் இருந்து இன்று வரை எவ்வித பாடமும் கற்றுக்கொள்ளாத நாடு ஒன்று இருக்கு என்றால் அது பாகிஸ்தான் தான்.வங்கதேசத்தை இழந்தும் இன்றைக்கும் தீவிரவாதத்தை உற்பத்தி செய்யும் நாடாக இருக்கிறதே தவிர, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த எதுவும் செய்யவில்லை.

மீண்டும் இந்தியாவை சீண்டியிருப்பதும், மக்களை கொன்று குவித்திருப்பதற்கும் சரியான பாடம் பெரும் வகையில் இந்தியாவின் நடவடிக்கை இருக்கும்.பாட்ஷாவையும், பாகிஸ்தான் தீவிரவாதத்தையும் ஆதரிக்கும் போக்கை கைவிட வேண்டும். இஸ்லாமியர்கள் என்பது வேறு, இஸ்லாமிய தீவிரவாதிகள் என்பது வேறு இதனை தமிழக மக்கள் உணர வேண்டும் என்பதுதான் எனது கனிவான வேண்டுகோள்.

உரிய தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இரு வேறு விதமாக இருக்கிறது. கேரளாவைப் பொறுத்தளவில் கேரள கவர்னர் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் என்று அதே உச்ச நீதிமன்றம் சொல்லி உள்ளது. இப்போது அதற்கு மாறான தீர்ப்பு வந்துள்ளது. சட்ட வல்லுனர்களை கொண்டு இதற்கு சரியான தீர்வை காண வேண்டும். எதிர்காலத்தில் இதுபோல கருத்து மோதல்கள் வருவது நல்லதல்ல. உரிய தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன் என உதகையில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாடு தொடர்பான கேள்விக்கு மகாராஷ்டிரா கவர்னர் பதில் அளித்தார்.

தமிழகத்தில் எல்லாருக்கும் மிரட்டல்கள் வருவது சாதாரண விஷயம் தான். இதில் துணைவேந்தர்கள் மட்டும் விதிவிலக்கல்ல என தமிழக கவர்னர் ஆர்என் ரவி குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார். மேலும், விஜய் அரசியல் மாற்றம் நடைபெறும் என்ற கேள்விக்கு, இதனை நயினார் நாகேந்திரனிடம் கேளுங்கள் என்றார். அரசியலில் மாற்றம் வருவது இயல்பு. அது எத்தகைய மாற்றம் என்பதை நான் சொல்ல இயலாது என கருத்து தெரிவித்தார்.