பிறந்தநாள் கொண்டாடிய சமுத்திரக்கனி
தேன்மொழி மெமோரியல் டிரஸ் மூலமாக கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் வானில் ஒரு நாள் பயணமாக சென்னையில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நடந்தது. கேன்சரால் பாதிக்கப்பட்ட 10 குழந்தைகளை சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் அழைத்துச் செல்லப்பட்டு இந்த குழந்தைகளுக்கு அங்கு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டு பெங்களூரில் முக்கிய சுற்றுலா தளங்களுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.
விமானத்தில் பயணம் செய்ய உள்ள குழந்தைகளை நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி, நடிகர்கள் மைம் கோபி, நரேந்திர பிரசாத், சின்னத்திரை தொகுப்பாளர் அர்ச்சனா, நடிகை சாய் தன்ஷிகா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் தனது பிறந்த நாளை நடிகர் சமுத்திரக்கனி சென்னை விமான நிலையத்தில் கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார்.
சின்ன, சின்ன சந்தோஷம் தான் வாழ்க்கை
பின்னர் நடிகர் சமுத்திரக்கனி செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்த நிகழ்வு மிகுந்த சந்தோசமாக உள்ளது. கேன்சர் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சந்திக்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. சின்ன சின்ன சந்தோசம் தான் வாழ்க்கை. கேன்சர் பெரிய விஷயம் கிடையாது. அதை கடந்து வந்து விடலாம்” என்றார்.
நடிகர் மைம் கோபி பேசுகையில், “விமானத்தில் அழைத்து செல்வது பெரிய சந்தோசம். கேன்சர் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி வரும். பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்து கொள்ளலாம். ஆனால் மற்றவர்கள் சிரிக்கும் சந்தோஷம் பெரியது” என்றார்.