மும்பை சென்ற விமானம்
சென்னையில் இருந்து மும்பை செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று மாலை 5 மணி அளவில், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, ஓடுபாதையில் ஓடத் தொடங்கியது. அந்த விமானத்தில் 158 பயணிகள், 8 விமான ஊழியர்கள் மொத்தம் 166 பேர் இருந்தனர்.
இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருந்த போது, விமானத்தின் பின்பக்க டயர் ஒன்று, திடீரென வெடித்து சிதறியது. இதை அடுத்து விமானம் ஓடுபாதையில் பயங்கரமாக குலுங்கிக்கொண்டு ஓடியது. இந்த நிலையில் விமானி, மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டு, விமானத்தை ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தினார். அதோடு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
டயர் வெடித்து விபத்து
இதனால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக இழுவை வண்டி வரவழைக்கப்பட்டு, டயர் வெடித்து ஓடுபாதையில் நின்ற விமானத்தை, இழுத்துக் கொண்டு வந்து, பழுதடைந்த விமானங்கள் நிற்கும் பகுதியில் நிறுத்தினர். பயணிகள் அனைவரும் விமானத்துக்குள்ளையே இருந்தனர்.
உடனடியாக விமான பொறியாளர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள் விரைந்து வந்து, பழுதடைந்த விமான டயரை மாற்றிவிட்டு, வேறு டயர் மாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர். சுமார் 2 மணி நேரத்தில் வேறு டயர் மாற்றி பொருத்தப்பட்டது.அதன்பின்பு அந்த விமானம் 158 பயணிகளுடன், சுமார் 2 மணி நேரம் தாமதமாக இன்று இரவு 7 மணிக்கு சென்னையில் இருந்து மும்பைக்கு புறப்பட்டு சென்றது.
உயிர் தப்பிய 166 பேர்
விமானத்தின் பின்பக்க டயர் வெடித்ததால், விமானம் சாதாரண குலுக்களுடன் நின்று விட்டது. ஆனால் விமானத்தின் முன்பக்க டயர் வெடித்து இருந்தால், ஓடுபாதையில் ஓடிய விமானம் தாறுமாறாக ஓடி, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்று கூறப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் 158 பயணிகள் உட்பட, 166 பேருடன், ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருந்த விமானம், திடீரென டயர் வெடித்து, பெருமளவு குலுங்கியதோடு, நல்வாய்ப்பாக விமானியின் சாமர்த்தியத்தால், விமானத்திலிருந்த 166 பேர் தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.