அரசியல்

மதுபான ஊழலில் திமுக சிக்காது- அண்ணாமலைக்கு அமைச்சர் ரகுபதி பதில் 

இபிஎஸ் அழைத்தால் நான் நேரில் விவாத மேடைக்கு சென்று அவருக்கு விளக்கம் அளிக்க தயாராக உள்ளேன்.

மதுபான ஊழலில் திமுக சிக்காது- அண்ணாமலைக்கு அமைச்சர் ரகுபதி பதில் 
அமைச்சர் ரகுபதி மற்றும் அண்ணாமலை

டெல்லி, சத்தீஸ்கர் மாநிலங்களை மதுபான ஊழலில் திமுக சிக்காது. அப்படியே அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தாலும், அதனை சட்டப்படி திமுக எதிர்கொண்டு வெற்றி பெறும் என அண்ணாமலைக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 14 புதிய அரசு பேருந்து சேவைகளை பேருந்து நிலையத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சியர் அருணா, எம்.எல்.ஏ முத்துராஜா ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

இதன்பின்னர் பேருந்தில் ஏறி சிறிது தூரம் பயணித்தனர்.இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டது என்று அண்ணாமலை கூறுவது அவர் சொல்லும் வழக்கமான குற்றச்சாட்டு தான். கஞ்சா தமிழ்நாட்டில் பயிரிடப்படுவதில்லை, அது பயிரிடப்படுவது வெளி மாநிலங்களிலோ, வெளி நாட்டிலோ, அது தமிழகத்திற்குள் வருகிறது என்றால் அதற்கு காரணம் மத்திய அரசு தான்.
அதனைத்தடுக்க வேண்டியது மத்திய அரசு. தமிழகத்தின் மீது மத்திய அரசு பழி போடுவது ஏற்புடையதில்லை. அண்ணாமலை அரசியல் பழி உணர்ச்சியோடு கூறும் குற்றச்சாட்டு என்றார்.

பாஜகவிடம் அடகு வைத்து விட்டு நாலரை ஆண்டுகாலம் ஆட்சி நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி. நாங்கள் எந்த வகையிலும் டெல்லிக்கு அடங்கிப் போவதில்லை, அடமானம் வைப்பதில்லை. இந்தியாவிலேயே டெல்லிக்கு எதிராக முதல் குரல் எழுப்பியவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தான்.எங்களுக்கு சொந்த புத்தி உண்டு. சொந்த காலில் நிற்கின்ற சக்தி உண்டு. சொந்த மண்ணை காப்பாற்றுகின்ற திறமையும் உண்டு.நாங்கள் நான்காண்டு காலத்தில் என்ன செய்துள்ளோம் என்பதை பட்டியல் போட்டு சொல்கின்றோம். அவரும் சொல்லட்டும் நாங்கள் சொல்கிறது உண்மையா இல்லையா என்பதை அவர் சொல்லட்டும். அதன் பின்பு விவாத மேடையை வைத்துக் கொள்வோம்.

நாங்கள் விவாதத்திற்கு தயார் என எத்தனையோ முறை சொல்லி உள்ளோம். இபிஎஸ் அழைத்தால் நான் நேரில் விவாத மேடைக்கு சென்று அவருக்கு விளக்கம் அளிக்க தயாராக உள்ளேன்.இந்த அரசியல் திட்டங்களை பட்டியல் போட்டு விளக்கவும், தயாராக உள்ளேன். அவர்கள் தோல்வி அடைந்த திட்டங்கள் என்னென்ன தந்துள்ளனர் என்பதையும் சொல்வதற்கு தயாராக உள்ளேன்.

Read more: சிலிண்டர் புக் செய்ய கால் பண்ணாலும் இந்தி மொழியா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்

நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன், சட்டமன்றத்திலேயே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மானபங்கம் செய்யப்பட்டுள்ளார் என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், அதாவது 79, 89ம் ஆண்டை தேடிப் பிடிச்சு திமுக மீது பழி சுமத்துவதற்கு நிர்மலா சீதாராமன் போல் ஆயிரம் பேர் வந்தாலும் மக்கள் இன்றைக்கு திமுக பெண்களுக்கு பாதுகாப்பு இயக்கம் என்று உணர்ந்துள்ளனர். எனவே பழைய குப்பையை கிளறிப் பார்க்கிறார்கள். அவர்கள் கிளறினாலும் அவர்களுக்கு குப்பை தான் கிடைக்குமே தவிர வேறு ஒன்றும் கிடைக்காது.

டெல்லி, சட்டீஸ்கர் மதுபான ஊழல் போல் தமிழகத்தில் மதுபான ஊழல் விசாரணை நடத்தினாலும்,  திமுக சிக்காது, அவர்கள் டெல்லியை போல மற்ற மாநிலங்கள் போல எங்கள் மீது வீண் பழி சுமத்தி எங்கள் ஆட்சிக்கு தொந்தரவு கொடுத்து நடவடிக்கையை எடுத்தாலும், திமுக தலைமையிலான தமிழக அரசு சிக்காது.தமிழகத்தில் கடந்த காலங்களில் இல்லாமல் தற்போது பெண்கள் தங்களுக்கு ஏற்படும் கொடுமைகளை தைரியத்துடன் வந்து புகார் அளிக்கின்றனர். புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

தற்போது இந்த புதிய பேருந்துகளில் கூட உங்களுக்கு கொடுமைகள் நடந்தால் பேருந்துகளில் உள்ள பட்டனை அழுத்தினால் காவல்துறைக்கு உடனடியாக தகவல் சென்று பெண்கள் காப்பாற்றப்படுவார்கள்.பாலியல் குற்றங்கள் எவ்வளவு வழக்குகள் வருகிறது என்பது முக்கியமல்ல. அது மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது தான் முக்கியம். நடவடிக்கைகள் திமுக ஆட்சியில் எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

Read more: கடன் தொல்லையால் மருத்துவர் எடுத்த முடிவு.. பரிதாபமாக பறிப்போன 4 உயிர்