இந்தியா

"ராகுல் ஜி.. திருமணம் செய்து கொள்ளுங்கள்"- பேக்கரி ஓனர் வைத்த கோரிக்கை!

டெல்லியில் மிக பழமையான கன்டேவாலா பேக்கரிக்கு சென்ற ராகுல் காந்தி அங்கு இனிப்புகளை தயாரித்து மகிழ்ந்தார்.


Rahul Gandhi
தீபாவளியை முன்னிட்டுப் டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டேவாலா பேக்கரிக்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அங்குப் பாரம்பரிய இனிப்புகளைத் தானே கையால் செய்து அசத்தினார். அப்போது கடை உரிமையாளர் சுஷாந்த் ஜெயின், ராகுல் காந்திக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்றும், அவரது திருமண இனிப்புகளுக்கான ஆர்டரைத் தாங்கள் பெற வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.

இனிப்புகள் தயாரித்த ராகுல் காந்தி

பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் பேக்கரிக்கு ராகுல் காந்தி வருகை தந்தார். அவர் அங்கு இமாா்த்தி (ஜிலேபி வகை) மற்றும் லட்டு ஆகிய பாரம்பரிய இனிப்புகளைத் தானே தயாரித்து மகிழ்ந்தார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "டெல்லியில் உள்ள கண்டேவாலா பேக்கரியில் இமாா்த்தி மற்றும் லட்டு தயாரித்தேன். பல நூற்றாண்டுகள் பழமையான இந்தக் கடையின் இனிமை இன்றும் அப்படியே உள்ளது—தூய்மையானது, பாரம்பரியமானது, மனதைத் தொடுவது" என்று ராகுல் காந்தி பதிவிட்டார்.

'திருமணம் செய்துகொள்ளுங்கள்..'

இதற்கிடையில் கடை உரிமையாளர் சுஷாந்த் ஜெயின், ராகுல் காந்தியின் வருகை மற்றும் அவருடனான உரையாடல் குறித்துப் பேசினார்.

"ராகுல் காந்தி தனது வீடு, நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்காக இனிப்புகள் வாங்க விரும்பினார். நான் அவரிடம், 'இது உங்களின் சொந்தக் கடை, உங்களை வரவேற்கிறோம்' என்றேன். அவர் வந்ததும், தானே இனிப்புகளைச் செய்து சுவைத்துப் பார்க்க விரும்புவதாகக் கூறினார். அவரது தந்தையான மறைந்த ராஜீவ் காந்திக்கு இமாா்த்தி மிகவும் பிடிக்கும் என்பதால், ராகுல் காந்தியை இமாா்த்தி செய்யுமாறு கேட்டுக்கொண்டேன், அவர் அதையும் செய்தார். அவருக்குப் லட்டுக்களும் மிகவும் பிடித்திருப்பதால், அதையும் அவரே செய்யுமாறு கூறினேன், அவரும் செய்தார்," என்று ஜெயின் கூறினார்.

மேலும், ராகுல் காந்தியின் திருமணம் ஆகாத நிலை குறித்துப் பேசிய ஜெயின், "அவர்தான் இந்தியாவில் மிகவும் தகுதியான பிரம்மச்சாரி என்று அனைவரும் பேசுகிறார்கள். நான், 'ராகுல் ஜி, தயவுசெய்து விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்கள் திருமண இனிப்புகளுக்கான ஆர்டரை நாங்கள் பெறக் காத்திருக்கிறோம்' என்று கூறினேன்" எனத் தெரிவித்தார்.