இந்தியா

Gujarat Cabinet Reshuffle: குஜராத் அமைச்சரானார் ஜடேஜாவின் மனைவி ரிவாபா!

கிரிக்கெட் வீரர் வீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா குஜராத் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.

Gujarat Cabinet Reshuffle: குஜராத் அமைச்சரானார் ஜடேஜாவின் மனைவி ரிவாபா!
Jadeja's wife Rivaba becomes Gujarat minister
கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவியும், ஜாம்நகர் சட்டமன்ற உறுப்பினருமான ரிவாபா ஜடேஜா, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேலின் புதிய அமைச்சரவையில் சேர்க்கப்பட்டு, இன்று அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றார். காலை 11:30 மணிக்கு காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் நடந்த விழாவில் அவர் அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார்.

ரிவாபா ஜடேஜாவின் பின்னணி

ராஜ்கோட்டில் 1990-இல் பிறந்த ரிவாபா, சமூகப் பணிகளில் ஈடுபாடு கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பட்டம் பெற்றவர். மேலும், பெண்கள் மேம்பாட்டுக்காகச் செயல்படும் 'மாத்ருசக்தி தொண்டு நிறுவனத்தை' நிறுவி நடத்தி வருகிறார். அரசியலில் நுழைவதற்கு முன், அவர் ராஜபுத்திர அமைப்பான கர்ணி சேனாவின் மகளிர் பிரிவின் தலைவராகச் செயல்பட்டார்.

அரசியல் பயணம்

ரிவாபா, 2019-ஆம் ஆண்டில் பா.ஜ.கவில் இணைந்தார். அவரது உறவினர் ஹரிசிங் சோலங்கி பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் என்பதால், அரசியல் குடும்பப் பின்னணியும் அவருக்கு உள்ளது. 2016-ஆம் ஆண்டில் ரவீந்திர ஜடேஜாவைத் திருமணம் செய்த அவர், தனது சமூகப் பணி மற்றும் அரசியல் அறிவால் தனக்கென ஒரு தனி அடையாளத்தைப் பதித்து, தற்போது அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளார்.