பீகார் மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) கட்சி இன்று 143 தொகுதிகளில் போட்டியிடும் தனது வேட்பாளர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தேஜஸ்வி யாதவ் போட்டியிடும் தொகுதி
இந்த வேட்பாளர்கள் பட்டியலில், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவரும், மாநிலத்தின் முக்கிய எதிர்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், வைஷாலி மாவட்டத்திற்கு உட்பட்ட ரகோபூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
தேர்தல் கால அட்டவணை
மொத்தம் 243 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பிகார் மாநிலத்திற்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. முதல்கட்டத் தேர்தல் நவம்பர் 6-ஆம் தேதி 121 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. முதல்கட்ட வேட்புமனுவைத் திரும்பப் பெற இன்று கடைசி நாளாகும்.
இரண்டாம் கட்டத் தேர்தல் நவம்பர் 11-ஆம் தேதி 122 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இரண்டாம் கட்ட வேட்புமனு தாக்கல் செய்யவும் இன்று (அக். 20) கடைசி நாளாகும். வேட்புமனு பரிசீலனை அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுவைத் திரும்பப் பெற அக்டோபர் 23-ஆம் தேதி கடைசி நாளாகும்.
இந்தியா கூட்டணியின் நிலை
தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன. ராஷ்ட்ரிய ஜனதா தளம் 143 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சி இதுவரை 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. 'இந்தியா' கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ) மற்றும் மார்க்ஸிய லெனினிஸ்ட் இந்திய கம்யூனிச கட்சி (சிபிஐ - எம்.எல்.) போன்ற கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.
'இந்தியா' கூட்டணி கட்சிகளுக்குள் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் பொதுவெளியில் வெளியாகவில்லை என்றாலும், கூட்டணிக் கட்சிகள் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

बिहार विधानसभा चुनाव-2025 के लिए राष्ट्रीय जनता दल द्वारा चयनित प्रत्याशियों की सूची।
— Rashtriya Janata Dal (@RJDforIndia) October 20, 2025
सभी उम्मीदवारों को हार्दिक बधाई एवं विजय की अग्रिम शुभकामनाएं। #Bihar #RJD pic.twitter.com/QI7ckgoIQ6