சினிமா

ரணகளம்.. ஆடுகளம்.. 'கருப்பு' படத்தின் 'GOD MODE' பாடல் வெளியானது!

சூர்யாவின் 'கருப்பு' படத்தின் முதல் பாடலான 'GOD MODE' வெளியாகியுள்ளது.

ரணகளம்.. ஆடுகளம்.. 'கருப்பு' படத்தின் 'GOD MODE' பாடல் வெளியானது!
Karuppu movie 1st Single
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி வரும் 'கருப்பு' படத்தின் முதல் பாடலான 'GOD MODE' தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தீபாவளி ஸ்பெஷல் பாடல் வெளியீடு

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகும் எனப் படக்குழு முன்னரே அறிவித்திருந்தது. அதன்படி, சரவெடியாக வெளியாகி, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது இந்தப் பாடல்.

இந்தப் பாடலுக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். முன்னதாக இந்தப் பாடலின் ப்ரோமோ வெளியாகி, 'சரவெடி ஆயிரம் பத்தனுமா...' என்ற வரிகளால் ரசிகர்களை ஈர்த்தது. சூர்யாவின் நடன அசைவுகளும், பாடலின் துள்ளலான இசையும் ரசிகர்களைக் கவர்ந்து வைரலாகி வருகின்றன.

நட்சத்திர பட்டாளம்

நடிகர் சூர்யா இந்தப் படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாகத் திரிஷா நடிக்கிறார். இது நீண்ட நாட்களுக்குப் பிறகு சூர்யா - திரிஷா மீண்டும் இணையும் படமாகும். மேலும், யோகி பாபு, நட்டி, மலையாள நடிகர் இந்திரன்ஸ், ஸ்வாசிகா, சிவதா, அனகா மாயா ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் இந்த படத்துக்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் நீதிமன்ற வழக்கு மற்றும் அதனுடன் கடவுள் நம்பிக்கை சார்ந்த விஷயங்களை இணைத்து ஒரு சமூக நீதி பேசும் ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. 'கருப்பு' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.