சினிமா

ஓடிடியில் வெளியாகும் பவன் கல்யாணின் 'ஓஜி' திரைப்படம்.. எப்போது தெரியுமா?

பவன் கல்யாண் நடிப்பில் வெளியான 'ஓஜி' திரைப்படம் வரும் 23 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ளது.

ஓடிடியில் வெளியாகும் பவன் கல்யாணின் 'ஓஜி' திரைப்படம்.. எப்போது தெரியுமா?
Pawan Kalyan's OG movie to be released on OTT
பவன் கல்யாண் நடிப்பில் கடந்த செப்.25 ஆம் தேதி வெளியாகி, உலக அளவில் ரூ. 293 கோடிக்கும் மேல் வசூல் செய்த 'ஓஜி' (OG - Original Gangster) திரைப்படம், வரும் 23-ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

சுஜித் இயக்கத்தில் வெளியான இந்தப் படம், ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றிக்குப்பின், இதன் முன்கதை மற்றும் பின் கதை எனத் தொடர் பாகங்கள் உருவாகும் என்றும், அதிலும் பவன் கல்யாண் நடிப்பார் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

ஐந்து மொழிகளில் வெளியீடு

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய 'ஓஜி' திரைப்படம், தற்போது ஓடிடி தளத்தில் வெளியாவதால் படக்குழு மிகுந்த நம்பிக்கையில் உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவுள்ளது.

டிவிவி நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில், பவன் கல்யாணுடன் பிரகாஷ் ராஜ், இம்ரான் ஹாஸ்மி, ஸ்ரேயா ரெட்டி, அர்ஜுன் தாஸ், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்துக்கு ஒளிப்பதிவை ரவி கே. சந்திரன் கவனிக்க, இசையமைப்பாளராகத் தமன் பணிபுரிந்திருந்தார்.