சினிமா

விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான 'சக்தி திருமகன்' திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Shakthi Thirumagan OTT Update
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில், இயக்குநர் அருண் பிரபாகரன் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான 'சக்தித் திருமகன்' திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'அருவி', 'வாழ்' போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த அருண் பிரபாகரன் இயக்கியுள்ள இந்தப் படம், அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளைப் பேசும் வகையில் அமைந்தது. இதில் வாகை சந்திரசேகர், சுனில் கிரிபாலனி, செல் முருகன், த்ருப்தி ரவீந்திரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார்.

விமர்சன ரீதியாகப் பாராட்டுகளைப் பெற்ற 'சக்தித் திருமகன்' திரைப்படம், வணிக ரீதியாகச் சற்று பின்தங்கியது. இப்படம் ரூ. 10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகளை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் பெற்றிருந்த நிலையில், படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 24-ஆம் தேதி முதல் ‘சக்தித் திருமகன்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் இந்தப் படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.