நடிகர் தனுஷ் இயக்கி, நடித்துள்ள புதிய திரைப்படமான 'இட்லி கடை' நேற்று (அக்டோபர் 1) திரையரங்குகளில் வெளியான நிலையில், இப்படம் முதல் நாளில் மட்டும் சுமார் ரூ.10.4 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படத்துக்கு, ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.
படக்குழுவினர்
'இட்லி கடை' திரைப்படத்தில் தனுஷ் உடன் நடிகை நித்யா மேனன் நாயகியாகவும், அருண் விஜய் வில்லனாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
குடும்பப் பின்னணி
'இட்லி கடை' படத்தில் வெளிநாட்டிலிருந்து தன் கிராமத்துக்குத் திரும்பும் தனுஷ், தன் தந்தையின் தொழிலான இட்லி கடையை வெற்றிகரமாக நடத்தும் கதையில் சில உணர்வுப்பூர்வமான தருணங்கள் இருந்தன. இதனால், ஒரு தரப்பினர் படத்தைக் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் எனக் கருத்து தெரிவித்து வந்தாலும், மற்றொரு தரப்பினர் கலவையான விமர்சனங்களையே கொடுத்துள்ளனர்.
எனவே, 'ராயன்' படத்தைத் தொடர்ந்து, இயக்குநராகத் தனுஷ் இந்தப் படத்திலும் வணிக ரீதியான வெற்றியைப் பெறுவாரா என்பது இந்த வார இறுதி வசூலில்தான் தெரியவரும். முதல் நாள் வசூல் ரூ.10.4 கோடியைத் தாண்டியுள்ள நிலையில், இந்த வார இறுதிக்குள் நல்ல தொகையை வசூலிக்கும் என்று சினிமா வர்த்தக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.