தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடித்து வரும் அவரது 54-வது படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாகத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அறிவித்துள்ளார்.
தனுஷின் 54-வது படம்..
தனுஷ் இயக்கத்தில் அவர் நடித்து சமீபத்தில் வெளியான ‘இட்லி கடை’ படத்தைத் தொடர்ந்து, 'போர் தொழில்' திரைப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் இந்தப் படத்தில் நடித்துள்ளார். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. இந்தப் படம் ஒரு பீரியட் கதையாகவும், பரபரப்பான கதைக்களத்தில் உருவாகியுள்ள ஒரு எமோஷனல் திரில்லர் என்றும் கூறப்படுகிறது. இதில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜு நடித்துள்ளார்.
தனுஷின் 'இட்லி கடை' படம் கடந்த 1-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அவர் அடுத்து நடித்துள்ள இந்திப் படமான ‘தேரே இஷ்க் மெயின்’ வரும் நவம்பர் 28-ஆம் தேதி வெளியாகிறது.
ரசிகர்களுக்கு ஐசரி கணேஷ் கொடுத்த அப்டேட்..
இந்த நிலையில், சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் 'டி-54' படத்தின் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார். அதாவது, இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அடுத்தாண்டு பிப்ரவரியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் கிடைத்ததும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.