சினிமா

Born Again: 'கும்கி 2' படத்தின் டீசர் வெளியானது!

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கும்கி 2 ' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Born Again: 'கும்கி 2' படத்தின் டீசர் வெளியானது!
Kumki 2 teaser
இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், 'கும்கி' படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள 'கும்கி 2' திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

'கும்கி 2'

2012ஆம் ஆண்டு விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் வெளியாகி, விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'கும்கி'. இந்தப் படத்தின் வெற்றிக்கு ஒளிப்பதிவாளர் சுகுமாரும் முக்கியக் காரணம்.

தற்போது, இயக்குநர் பிரபு சாலமன் மற்றும் ஒளிப்பதிவாளர் சுகுமார் கூட்டணி மீண்டும் இணைந்து 'கும்கி 2' படத்தில் பணியாற்றியுள்ளது. இந்தப் படம் முழுவதுமே காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில், மதியழகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.

விஜய் சேதுபதி வெளியிட்ட டீசர்

பிரபு சாலமன் இயக்கத்தில் மதி, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள 'கும்கி 2' படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி இன்று வெளியிட்டார். டீசருடன், வாழ்த்து தெரிவித்து அவர் வெளியிட்ட பதிவில், "ஒரு மனிதனுக்கும் யானைக்கும் இடையிலான நட்பு மற்றும் பிணைப்பைப் பற்றிய அழகான கதை. முழு குழுவினருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த எதிர்பார்ப்புக்குரிய 'கும்கி 2' திரைப்படம் வரும் நவம்பர் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.