'லப்பர் பந்து', 'பார்க்கிங்' போன்ற அடுத்தடுத்த வெற்றிகளைத் தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள 'டீசல்' திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தை, சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார். மேலும், நடிகர்கள் வினய், கருணாஸ், ரமேஷ் திலக், காளி வெங்கட், சாய் குமார், அனன்யா, விவேக் பிரசன்னா, சச்சின் கேதேகர், ஜாகீர் உசேன், தங்கதுரை, கேபிஒய் தீனா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தேவராஜுலு மார்க்கண்டேயன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இருந்து வெளியான 'பீர் கானா' பாடல் ஏற்கெனவே வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தணிக்கை வாரியம் 'டீசல்' திரைப்படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. முன்னதாக டீசர் மற்றும் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது டிரெய்லர் வெளியாகி வைரலாகியுள்ளது.
'டீசல்' திரைப்படம் தீபாவளி வெளியீடாக வரும் அக்டோபர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. டீசல் மற்றும் பெட்ரோல் மாஃபியா குறித்த அதிரடி ஆக்ஷன் படமாக 'டீசல்' உருவாகியுள்ளது. ட்ரெய்லரில் ஹரிஷ் கல்யாணின் சண்டை காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஹரிஷ் கல்யாணின் கேரியரில் இந்த படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

#Diesel trailer is here for you all - https://t.co/Sv6hFeL3Qp #DieselDiwali ❤️🙏 pic.twitter.com/zXQ0PhmHug
— Harish Kalyan (@iamharishkalyan) October 10, 2025