சினிமா

ரஜினி ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்.. 'ஜெயிலர் 2' படத்தின் BTS வீடியோ வெளியீடு!

தீபாவளியை முன்னிட்டு 'ஜெயிலர் 2' படத்தின் பிடிஎஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

ரஜினி ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்.. 'ஜெயிலர் 2' படத்தின் BTS வீடியோ வெளியீடு!
BTS video release of Jailer 2
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கி வரும் 'ஜெயிலர் 2' படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

படப்பிடிப்பு மும்முரம் மற்றும் வெளியீட்டுத் தேதி

2023-ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'ஜெயிலர்' படத்தின் இரண்டாம் பாகமான 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ரஜினிகாந்த், படத்தின் படப்பிடிப்புக்காகக் கேரளா சென்றிருந்தார். அங்கு அதிரடியான சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம், ஜூன் மாதம் வெளியாகும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.

புதிய நட்சத்திரங்கள்

முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்ணா மேனன், சிவராஜ்குமார் போன்றோர் இந்தப் பாகத்திலும் தொடர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடர்ச்சிப் படத்தில் பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, எஸ்.ஜே. சூர்யா, நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு போன்றோரும் முக்கிய வேடங்களில் இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தீபாவளி ஸ்பெஷல் BTS வீடியோ

படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, 'ஜெயிலர் 2' படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட Behind The Scenes (BTS) வீடியோ ஒன்றை வெளியிட்டு, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தது. இந்த வீடியோ, ரஜினி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.