'புனிதப்படுத்தும்' சடங்கு
சமூக வலைத்தளங்களில் பரவிய காணொளி ஒன்றில், சில இஸ்லாமிய பெண்கள் கோட்டையின் ஒரு பகுதியில் தொழுகை செய்வதாகக் காட்டப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக எம்.பி. மேதா குல்கர்னி தலைமையில் இந்து அமைப்பினர் அந்த இடத்தை கோமியம் தெளித்து பூஜை நடத்தினர்.
பாஜக எம்.பி.யின் கருத்து:
"சனிவார்வாடா என்பது மராட்டியப் பேரரசின் சின்னம். இது தொழுகை செய்வதற்கான இடம் அல்ல. இது ஒவ்வொரு புனே நகரவாசிக்கும் கவலை அளிக்கும் விஷயம். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து சமுதாயம் விழிப்புடன் இருக்க வேண்டும்," என்று எம்.பி. மேதா குல்கர்னி கூறினார்.
शनिवार वाड्यात नमाज पठण चालणार नाही, हिंदू समाज आता जागृत झाला आहे ! 🚩🚩
— Dr. Medha Kulkarni (@Medha_kulkarni) October 19, 2025
🚩चलो शनिवार वाडा! 🚩
रविवार, 19 ऑक्टोबर 2025
📍 शनिवार वाडा, कसबा पोलीस चौकीसमोर
🕓 सायंकाळी 4 वाजता
---
🔥 पुण्याचे वैभव – शनिवार वाडा
ऐतिहासिक वारसा स्थळ की गैर हिंदू प्रार्थना स्थळ?
सारसबाग येथे… pic.twitter.com/EObcXMZ6Rt
எதிர்க்கட்சிகளின் விமர்சனம்
பாஜக எம்.பி. மேதா குல்கர்னியின் இந்தச் செயலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரூபாலி பாட்டீல் தோம்ப்ரே, "குல்கர்னி மத நல்லிணக்கத்தைக் குலைக்க முயல்கிறார்" என்றும், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஏஐஎம்ஐஎம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வாரீஸ் பதான், "மூன்று நிமிட தொழுகையால் உங்களுக்கு என்ன சிக்கல்? அரசியலமைப்புச் சட்டம் மதச் சுதந்திரத்தை வழங்குகிறது. வெறுப்பைப் பரப்புவதை நிறுத்தி, உங்கள் மனதைத் தூய்மைப்படுத்துங்கள்," என்று பதிலடி கொடுத்தார்.
போலீசார் நடவடிக்கை
இந்தியத் தொல்லியல் துறை (ASI) அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், கோட்டையில் தொழுகை நடத்திய அடையாளம் தெரியாத பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், "சனிவார்வாடா தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பாரம்பரிய நினைவுச்சின்னம். இங்கு மத வழிபாடுகள் நடத்தப்பட்டுள்ளன. தொல்லியல் துறையின் புகாரின் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கோட்டையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.