இந்தியா

நீதிமன்ற உத்தரவுக்கு ஏ.ஐ. உதவி வேண்டாம்: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு!

Artificial intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு கருவிகளின் உதவியோடு நீதிமன்றங்களின் உத்தரவுகள் பிறப்பிக்கப்படக் கூடாது எனக் கேரள உயர் நீதிமன்ற நீதித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட நீதித்துறை சார்ந்தோருக்கு சிறப்பு வழிகாட்டுதலை கேரளா உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவுக்கு ஏ.ஐ. உதவி வேண்டாம்: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு!
நீதிமன்ற உத்தரவுக்கு ஏ.ஐ. உதவி வேண்டாம்: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு!
அங்கீகரிக்கப்பட்ட சேர்க்கை நுண்ணறிவு கருவிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், சேர்க்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்துவது தொடர்பாகச் சட்ட பயிற்சி மையத்திலோ, உயர் நீதிமன்றத்திலோ நடைபெறும் பயிற்சிகளில் பங்கேற்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அங்கீகரிக்கப்பட்ட ஏஐ கருவிகளைப் பயன்படுத்துவதில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பதை நீதித்துறை அலுவலர்கள் கவனித்தால் உடனடியாக உயர் நீதிமன்றத்தின் தகவல் தொழில்நுட்பத் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் வழிகாட்டுதல்கள் மீறப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஏ ஐ கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை தெளிவுபடுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது தீர்ப்புகள் எழுதவும் சாட்சி அறிக்கைகளைப் பதிவு செய்யவும் ஏ ஐ கருவிகளைப் பயன்படுத்துவதில் ஒவ்வொரு கட்டத்திலும் மேற்பார்வையிட வேண்டும் எனவும் ஏ ஐ கருவிகளைப் பயன்படுத்தும்போது கூடப் பிழை ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

CHAT GPT போன்ற கிளவுட் அடிப்படையிலான ஏஐ கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம் எனவும், இக்கருவிகள் பல வழிகளில் உதவியாக இருந்தாலும் அவற்றின் கட்டுப்பாடற்ற பயன்பாடு என்பது தனி உரிமை மற்றும் தரவு பாதுகாப்பை பாதிக்கும் என்பதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.