இந்தியா

சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஒப்புதல்.. மத்திய அரசு அதிரடி!

நாடு முழுவதும் சாதி வாரியான கணக்கெடுப்பும் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக எதிர்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஒப்புதல்.. மத்திய அரசு அதிரடி!
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்துக்குப்பின் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கரும்புக்கான குறைந்தப்பட்ச ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு 355 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும்

22 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் வடகிழக்கில் ஷில்லாங் முதல் சில்சார் வரை புதிய தேசிய நெடுஞ்சாலை திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் கூறினார். சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாகவும் அவர் கூறினார்.

நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாகவும் அமைச்சர் அறிவித்தார். எதிர்வரும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி விவரங்களும் சேர்க்கப்படும் எனவும் மத்திய அரசின் அதிகார வரம்பின் கீழ் இது நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மாநிலங்கள் தனித்தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் விளக்கம் அளித்தார். இந்த அறிவிப்பை அடுத்து அடுத்த ஆண்டே கணக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் கூறப்படுகிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பை முதன்முறையாக நடத்திய பாஜக கூட்டணி பீகார் நிதிஷ்குமார் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பு தேவை என்பது காங்கிரஸ், திமுக, பாமக, CPIM உள்ளிட்ட எதிர்கட்சிகளின் நீண்ட நாட்களாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறனர்.