ஐபிஎல் 2025

IPL 2025: வெற்றிபாதைக்கு திரும்புமா மும்பை? மும்பை - பெங்களூரு அணிகள் இன்று மோதல்!

MI vs RCB: மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் 2025 தொடரின் 20வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

IPL 2025: வெற்றிபாதைக்கு திரும்புமா மும்பை? மும்பை - பெங்களூரு அணிகள் இன்று மோதல்!
மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் இன்று மோதல்

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 10 அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 19 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று, டெல்லி கேப்பிடல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

தோல்வியில் இருந்து மீளுமா MI?

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில், மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. காயத்திலிருந்து மீண்டுள்ள பும்ரா மும்பை அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.

3-வது வெற்றியை நோக்கி RCB

ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு ராயல்சேலஞ்சர்ஸ் அணி, இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளில் இரண்டு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ஆர்சிபி அணி வீரர்கள் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அதிரடி காட்டி வந்த நிலையில், கடைசி போட்டியில் தோல்வியை தழுவியதால், தொடர்ந்து வெற்றி பெற தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

புள்ளிப்பட்டியல்

நடப்பு தொடரில் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வரும் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றிப்பெற்றால் பெங்களூரு அணி முதலிடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

5 முறை சாம்பியன் டிராபிகலை வென்றுள்ள மும்பை இந்த தொடரில் தொடர்தோல்விகளுடன், புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.

இன்றையப் போட்டியில் வெற்றி பெறவேண்டும் மும்பை- பெங்களூரு அணிகள் மிகவும் கடுமையாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, இன்றைய போட்டியில் இரண்டு கடுமையாக போராடும் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

மும்பை, பெங்களூரு அணிகள் இதுவரை, 33 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில், மும்பை 19 போட்டிகளிலும், பெங்களூரு அணி 14 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

மும்பை - பெங்களூரு அணிகள் மோதும் இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஐபிஎல் போட்டிகளை ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார்போர்ட்ஸ் இர்ண்டிலும் நேரலையில் பார்க்கலாம்.