சென்னையில் TVH குழுமத்திற்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, அமைச்சர் கே.என்.நேருவின் மகனான பெரம்பலூர் எம்.பி. அருண் நேருவுக்கு சொந்தமான இடங்களிலும், அவரது தம்பி கே.என். ரவிச்சந்திரன் தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மைக்காலமாக கட்டுமான நிறுவனக்களில் அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இன்று சென்னையில் TVH குழுமத்திற்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் கே.என். நேருவின் சகோதரரான கே.என் ரவிச்சந்திரன் தொடர்புடைய இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கே. என். நேரு மகன் கே. என். அருண் நேருவுக்கு சொந்தமான நிறுவனத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை ஆர்.ஏ. புரம் மூன்றாவது குறுக்கு தெருவில் செயல்பட்டு வரும் TVH Novella New அலுவலகத்தில் சோதனை நடைபெறுகிறது. இந்த அலுவலகம் கே என் ரவிச்சந்திரனுக்கு சொந்தமானது. மேலும், GSNR Rice Industrial Pvt limited என்ற நிறுவனம் கே என்நேருவின் மகன் அருணுக்கு சொந்தமான சென்னை அடையாறு, பெசன்ட் நகர், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, சி.ஐ.டி. காலணி, எம்.ஆர்.சி.நகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே சோதனையில் இறுதியிலேயே சோதனைக்கான முழு விரவமும், சோதனை குறித்த முக்கிய ஆவணங்கள் ஏதேனும் பறிமுதல் செய்யப்பட்டதா? என்பது தெரியவரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னர், இந்த நிறுவனங்களில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சோதனையில்,ரூ.100 கோடி பணமும், 90 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு
அமைச்சர் கே.என். நேருவின் மகன் மற்றும் அவரது சகோதரருக்கு சொந்தமான நிறுனங்களில் ED சோதனை!
சென்னையில் அமைச்சர் கே.என். நேரு மகன் அருண் மற்றும் அவரது சகோதரர் கே.என். ரவிசந்திரனுக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.