ஐபிஎல் 2025

CSKvsKKR: சென்னை வந்த கொல்கத்தா அணி வீரர்கள்...உற்சாகமாக வரவேற்ற ரசிகர்கள்

வரும் 11ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கொல்கத்தா அணி மோத உள்ளது.

CSKvsKKR: சென்னை வந்த கொல்கத்தா அணி வீரர்கள்...உற்சாகமாக வரவேற்ற ரசிகர்கள்

கொல்கத்தா அணி வருகை

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுவதற்காக கொல்கத்தாவில் இருந்து விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

கொல்கத்தா வீரர்கள் சென்னை விமான நிலையம் வரும்பொழுது அணியின் கேப்டனான ரகனே வரவில்லை. இந்த நிலையில்,சென்னை விமான நிலையம் வந்தடைந்த வீரர்கள் அனைவரும் வெளியே வரும்பொழுது, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.


உற்சாக வரவேற்பு

இதனைத்தொடர்ந்து வீரர்கள் ரசிகர்களிடம் இருந்த போஸ்டர்களில் கையொப்பமிட்டு சென்றனர். மேலும் சென்னை விமான நிலையத்தில் இருந்து சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிக்கு வீரர்கள் அனைவரும் தனி வாகன மூலம் புறப்பட்டு சென்றனர். வரும் 11ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் கொல்கத்தா அணி மோத உள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 5 போட்டிகளில் இரண்டு போட்டிகள் மட்டுமே வெற்றி பெற்று இருக்கும் நிலையில், மூன்றாவது போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் சென்னை வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.