ஐபிஎல் 2025

Dewald Brevis: சென்னை அணியில் குட்டி ஏபிடி.. CSK கொடுத்த இன்ப அதிர்ச்சி

2025 ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தென்னாப்பிரிக்காவின் இளம் சர்வதேச வீரரான டெவால்ட் பிரெவிஸை ஒப்பந்தம் செய்துள்ளது.

Dewald Brevis: சென்னை அணியில் குட்டி ஏபிடி.. CSK கொடுத்த இன்ப அதிர்ச்சி
csk has signed dewald brevis for ipl 2025
நடப்பு ஐபிஎல் தொடரில் ஏறத்தாழ அனைத்து அணிகளும் 6 முதல் 7 போட்டிகள் வரை விளையாடியுள்ள நிலையில், 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் கடைசி இடத்திலுள்ளது. 5 போட்டிகள் தொடர்ந்து தோல்வியுற்று ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது சிஎஸ்கே.

ப்ளே-ஆப் வாய்ப்பினை உறுதி செய்ய இனி மீதமுள்ள 7 போட்டிகளில் குறைந்தது 6 போட்டிகளாவது வென்றாக வேண்டும். இல்லையென்றால், ரன் ரேட் அடிப்படையில் ப்ளே ஆப் செல்ல 5 போட்டிகளாவ்து வென்றாக வேண்டிய நெருக்கடியில் சிஎஸ்கே உள்ளது.

இந்நிலையில் தான் சென்னை அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங்கிற்கு மாற்றாக தென்னாப்பிரிக்காவின் அதிரடி கிரிக்கெட் வீரர் பிரெவிஸ் சிஎஸ்கே உடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குர்ஜப்னீத் சிங் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேற உள்ளார். சென்னை அணியில் ஒரு வெளிநாட்டு வீரருக்கான இடம் மீதமுள்ளதால், தென்னாப்பிரிக்க வீரரை மாற்றாக ஒப்பந்தம் செய்ய முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்காக இதுவரை ஓரிரு போட்டிகளில் மட்டுமே டெவால்ட் பிரெவிஸ் விளையாடியிருந்தாலும், 19 வயதுகுட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் பிரெவிஸ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இவர் புகழ்பெற்ற ஏபி டிவில்லியர்ஸுன் சொந்த மகன் என்பதாலும் இவரது பேட்டிங் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு உள்ளது.

டெவால்ட் பிரெவிஸ் ஏற்கனவே ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மொத்தம் 10 போட்டிகளில் விளையாடியுள்ளார், மேலும் எம்எல்சி மற்றும் எஸ்ஏ20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். சென்னை அணியில் இணைவது குறித்த தகவலை உறுதி செய்யும் விதமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார் பிரெவிஸ். இவரின் வருகை சென்னை அணிக்கு கைக்கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.