தமிழ்நாடு

பெண்ணின் கன்னத்தை கிள்ளி லவ் யூ சொன்ன இளைஞர்- தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

நடந்து சென்ற இளம்பெண்ணின் கன்னத்தை கிள்ளி ஐ.லவ்.யூ சொன்னவரை பொதுமக்கள் கட்டி வைத்து அடித்து உதைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணின் கன்னத்தை கிள்ளி லவ் யூ சொன்ன இளைஞர்- தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
பெண்ணின் கன்னத்தை கிள்ளி லவ் யூ சொன்ன இளைஞர்- தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் சென்னை தி.நகர் பகுதியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இன்று காலை இந்த பெண் தான் தங்கியிருந்த விடுதியில் இருந்து அலுவலகத்திற்கு நடந்து சென்றார். அப்போது பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர் திடீரென அந்த பெண்ணின் கன்னத்தை கிள்ளி ’ஐ.லவ்.யூ செல்லம்’ என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த பெண் சத்தம் போட்டதால் அருகிலிருந்த பொதுமக்கள் அந்த நபரை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர்.பிறகு தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த அந்த நபரை மீட்டு கைது செய்தனர். விசாரணையில் அவர் தி.நகரைச் சேர்ந்த விக்னேஷ் என்பது தெரிய வந்துள்ளது.

மதுப்போதையில் இவ்வாறு ஈடுபட்டுள்ளாரா? இல்லை தொடர்ந்து இதுப்போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறாரா? என பிடிபட்ட விக்னேஷிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more:தவெக கட்சி கொடியில் யானை சின்னம்- விஜய் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு