ஐபிஎல் போட்டிகள் விறுபவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில், கொல்கத்தா அணியை வீழ்த்தி 14 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டிக்குப் பிறகு, டெல்லி கேபிடல்ஸ் வீரர் குல்தீப் யாதவ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் ரிங்கு சிங்கை அறைந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில்,தற்போது இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் போட்டிக்கு பின்னர், அருண் ஜெட்லி மைதானத்தில் வீரர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ரிங்கு சிங் எதோ பேச, டெல்லி கேபிடல்ஸ் வீரர் குல்தீப் யாதவ் கொல்கத்தா வீரர் ரிங்கு சிங்கை கன்னத்தில் அறைந்தார். அதன்பிறகு ரிங்கு சிங்குவின் முகம் சட்டென மாறியது, ஆனாலும், அதனை வெளிக்காட்டாது, சிரித்தப்படியே நின்றார். ஆனால், குல்தீப் யாதவ் மீண்டும் ரிங்கு சிங் கன்னத்தில் அறைந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலான நிலையில், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இருவரும் நண்பர்கள், விளையாட்டாக அடித்திருப்பார் என்று ஒரு தரப்பினர் சாதகமாக பேசிய நிலையில், மற்றொரு தரப்பினர், குல்தீப் இத்தகைய செயல் தற்போது பேசுபொருளாகியுள்ளது. சாதாரணமாக அடித்தது போல், இது இல்லை என்றும், வேண்டும் என்றே குல்தீப் அடித்துள்ளார் என்றும் விமர்சங்கள் எழுந்துள்ளது.
எந்த காரணத்திற்காக குல்தீப், ரிங்கு சிங்கை அடித்தார் என்பது இதுவரை தெரியவில்லை. இருவரும் இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.