வயநாடு நிலச்சரிவு; லட்சங்களில் நிதியுதவி வழங்கிய செஸ் சாம்பியன் குகேஷ்!

உலகின் நம்பர் ஒன் ஜூனியர் செஸ் சாம்பியன் ஆன குகேஷ், வயநாடு நிலச்சரிவிற்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

Aug 11, 2024 - 08:01
 0
வயநாடு நிலச்சரிவு; லட்சங்களில் நிதியுதவி வழங்கிய செஸ் சாம்பியன் குகேஷ்!
நிதியுதவி வழங்கிய செஸ் சாம்பியன் குகேஷ்

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு நிலப் பயன்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவைதான் முக்கிய காரணங்கள் என ஆய்வார்கள் தெரிவிக்கின்றனர். 

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கேரள மாநிலத்தில் கடந்த 30ம் தேதி அதிகாலையில் வயநாடு மாவட்டம் மேப்பாடி அடுத்த சூரல்மலை பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு ஏற்பட்டு இரண்டு மணி நேரத்தில், அதாவது அதிகாலை 4.30 மணியளவில் மேம்பாடிக்கு அருகில் உள்ள பகுதிகளில் மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மேப்பாடி, சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட கிராமங்கள் கடுமையாக பதிக்கப்பட்டன. 

தற்போதுவரை 300க்கும் அதிமானோர் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். உயிரிழப்பை பொறுத்தவரை தொடக்கத்தில் 100 - 150 என்கிற அளவில்தான் இருந்தது. ஆனால் தற்போதைய நிலவரப்படி சுமார் 300க்கும் அதிகமான உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாகக் கேரள அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் தோண்ட தோண்ட சடலங்கள் வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

நிலச்சரிவில் இருந்து மீண்ட மக்களுக்கு உதவவும், மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர்.

அண்மையில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் சாம்பியன் ஆன குகேஷ் உலகின் நம்பர் ஒன் ஜூனியர் செஸ் வீரராக அறிவிக்கப்பட்டார். முகேஷ் படிக்கும் மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழாவின்போது 220 ஹெலிகேம் மூலம்  குகேஷ்க்கு வாழ்த்து தெரிவிக்கும் வான் கண்காட்சி நடைபெற்றது. அத்துடன் பள்ளிக் குழந்தைகளின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் குகேஷை கவுரவிக்கும் வகையில் பென்ஸ் கார் பரிசாக வழங்கப்பட்டது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக கேரளாவின் வயநாடு நிலச்சரிவுக்கு தனது பங்காக ரூ. 10 லட்சத்தை  நிவாரண நிதியாக குகேஷ் வழங்கினார். இது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

மேலும் படிக்க: நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்!

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த குகேஷ், “சிங்கப்பூர் சென்று செஸ் விளையாடினாலும் எனது கவனம் முழுவதும் ஆட்டத்தில் மட்டும்தான் இருக்கும். சொந்த ஊரில் நம் மக்கள் முன்புதான் விளையாட வேண்டும் என்று இல்லை. எங்கு விளையாடினாலும் சிறப்பான ஆட்டத்தை விளையாடவே, நான் நினைப்பேன். அடுத்ததாக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் பல பேர் பங்கேற்க உள்ளனர். அது கண்டிப்பாக பெரிய அளவில் பேசப்படும். எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் செஸ் போட்டியை கொண்டு வந்தால் மிகவும் நன்றாக இருக்கும்” என தெரிவித்தார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow