மழையால் வந்த சோதனை.. மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு..
சென்னை பிராட்வேயில் இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் புயலாக உருவானது. இதையடுத்து இந்த புயல் இன்று இரவு அல்லது நாளை ( ஞாயிற்றுக்கிழமை) காலை புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான சாலைகள், தெருக்களில் வெள்ளம் தேங்கி உள்ளது. பலத்த காற்றும் வீசுவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
மேலும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று தமிழ்நாடு அரசும் வலியுறுத்தி உள்ளது. தொடர் கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் உள்ள சுரங்கபாதைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
ஃபெஞ்சல் புயல் எதிரொலியால் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வழங்க வேண்டிய உணவை மாநகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது.
இந்த நிலையில், சென்னை பிராட்வேயில் உள்ள ஏடிஎம்-மில் பணம் எடுக்க சென்ற இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்நபர் உத்தரப்பிரதே மாநிலத்தை சேர்ந்த சந்தன் என்பதும் பணம் எடுக்க சென்ற போது இரும்பு கம்பியை பிடித்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து முத்தையால் பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?