International Traffic Light Day 2024 : நெடுஞ்சாலைகளில் சிவப்பு இதயம்.. டிராபிக் சிக்னல் தினத்தில் சாலையில் அன்பு மழை

International Traffic Light Day 2024 : சாலை பாதுகாப்பு விதிகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே சர்வதேச போக்குவரத்து விளக்குகள் தினம் கடைப் பிடிக்கப் படுகிறது. இன்றைய தினம் சாலைகளில் உள்ள சிவப்பு சிக்னல் இதய வடிவத்தில் ஒளிர்ந்து அன்பு மழை பொழிந்தது.

Aug 5, 2024 - 15:25
Aug 6, 2024 - 10:09
 0
International Traffic Light Day 2024 : நெடுஞ்சாலைகளில் சிவப்பு இதயம்.. டிராபிக் சிக்னல் தினத்தில் சாலையில் அன்பு மழை
International Traffic Light Day 2024

International Traffic Light Day 2024 : நில் கவனி செல் பயணம் தொடர்பான இந்த வார்த்தைகளை எத்தனை பேர் அலட்சியப் படுத்துகிறார்கள் தெரியுமா? அவர்களுக்கும் தெரியும் இந்த அலட்சியத்தின் மூலம் தங்கள் உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என்பது. ஆயினும் இந்தத் தவறை இன்னும் பலர் செய்தே வருகின்றனர். அவர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகளை பற்றிய விழிப்புணர்வைத் தர ஆகஸ்ட் 5ஆம் தேதி சர்வதேச போக்குவரத்து விளக்குகள் தினமாகக் கடைப் பிடிக்கப் படுகிறது .
 
பயணங்களும் வேகத்தை விட சிறந்தது விவேகம் எனும் சொற்றொடர் உண்டு. ஆம் விவேகத்துடன் சாலைப் பயணத்தின்போது பாதுகாப்பு தரும் போக்குவரத்து விளக்குகளுக்கு கட்டுப்பட்டு நடந்தாலே பல விபத்துகள் தடுக்கப்படும். எனவேதான் நில் கவனி செல் என்ற வார்த்தையை டிராபிக் சிக்னலுக்காக பயன்படுத்தினர்.

மனிதன் ஆதிகாலத்தில் இருந்தே பயணம் செய்வதற்காக பலவிதமான கட்டுப்பாடுகளை காலத்திற்கு ஏற்ப கடைப்பிடித்து வந்தாலும் அறிவியல் முன்னேற்றங்கள் பெருகிய இந்தக் காலத்தில் முதன் முதலில் இந்த போக்குவரத்துக்கான எச்சரிக்கை ஒளி விளக்குகளை பொருத்தியவர் ஜேம்ஸ் ஹோக் என்பவரே. 


1914 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று அமெரிக்காவின் நகரான ஓஹியோ கிளீவ்லாண்ட்ல் உள்ள  யூக்ளிட் அவென்யூவில் மூலையில் ஜேம்ஸ் ஹோக் பொருத்தப்பட்ட மின்சாரத்தில் இயங்கும் முதல் போக்குவரத்து விளக்கு என்று கருதப்படுகிறது. அதில் நான்கு சிவப்பு விளக்குகள் மற்றும் பச்சை விளக்குகளுடன் ஒளி எப்போது மாறப்போகிறது என்பதற்கான கால அளவு கொண்ட ஒலி எழுப்பும் கருவியுடன் வடிமைத்து பொருத்தினார். 
 
இது அருகில் உள்ள இடத்தில இருந்த மனிதரின் கைகளால் இயக்கும் வண்ணம் அப்போது இருந்தது. காலங்கள் மாற மாற ஆட்டோமேடிக்காக இயங்கும் விளக்குகள் தற்போது சிக்னல் எனும் பெயரில் சாலைக் கம்பங்களில் பொருத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் முதன் முதலில் ஜேம்ஸ் ஹோக் பொருத்தப் பட்ட இந்த தினத்தையே சர்வதேச டிராபிக் சிக்னல்கள் தினமாக உலகெங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

உலகம் முழுவதும் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதிலும், விபத்துகளைத் தடுப்பதிலும் போக்குவரத்து சிக்னல்களின் பங்கு மிகவும் முக்கியமானது. 
அதன்படி இன்று சர்வதேச டிராபிக் சிக்னல் தினத்தையொட்டி சென்னையில் உள்ள சில டிராஃபிக் சிக்னல் விளக்குகள் இதய வடிவில் ஒளிரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

இதய பிரச்னை தொடர்பாக அவசர காலங்களில் முதலுதவி அல்லது மருத்துவ உதவியை விரைவாக பெறுவதற்காக போக்குவரத்து சிக்னலில் இதய வடிவிலான அமைப்பை ஒளிர செய்துள்ளனர். அன்பான இதயத்திற்கு அன்பு மழை பொழிகின்றன டிராபிக் சிக்னல்கள்.

நாம் நம் வாழ்க்கையில் தினமும் ஒருமுறையாவது போக்குவரத்து சிக்னலை பார்க்காமல் இருக்கமாட்டோம். ஆனால் போக்குவரத்து சிக்னல்கள் ஏன் எப்போதும் சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் மட்டுமே இருக்கிறதென்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.போக்குவரத்து சிக்னல்கள் உலகம் முழுவதும் சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் மட்டும்தான் உள்ளது என்பது கூடுதல் தகவல்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow