#JUSTIN || 10 மணிக்கு "கண்டம்" - அபாய மணி அடித்த வானிலை மையம்
தமிழகத்தில் 21 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை 10 மணிவரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.
தமிழகத்தில் 21 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை 10 மணிவரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.
கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.
சென்னை மற்றும் புறநகரில் இரவில் கொட்டி தீர்த்த கனமழை.
தவறாக போன வானிலை கணிப்புகள்...
வடகிழக்கு பருவமழையில் அழையா விருந்தாளியாக வந்த பாம்புகளை பிடித்த தீயணைப்புத்துறையினர்.
வடகிழக்கு பருவமழையின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த துரித நடவடிக்கைகளின் தொகுப்பு.
தமிழ்நாட்டில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்
வரும் 22ஆம் தேதி மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி தமிழ்நாட்டில் உள்ள வட மாவட்டங்களுக்கு மழைப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் உள்ள சில முக்கியமான பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக். 18) 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேலூர் மாவட்டம் பொய்கை ஊராட்சி அலுவலக கட்டடத்தில் மழைநீர் ஒழுகி தேங்கியதில் கணினி, பேட்டரிகள், சான்றிதழ்கள் சேதமடைந்தன. உடனடியாக அலுவலகத்தை சீரமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. கனமழையால் ஏற்பட்ட மண்சரிவை அகற்றும் பணி நிறைவடைந்ததையடுத்து ரயில் சேவை தொடங்கியது.
வடகிழக்கு பருவமழையின் முதல்கட்ட ஒரு நாள் மழைக்கே தமிழ்நாட்டின் தலைநகரத்தை தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக அரசிற்கு கடும் கண்டனம் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நவம்பர் மாதத்தில் தான் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல்
மக்களே உஷார்! 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்
சென்னை மாவட்டத்தில் இன்று வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என ஆட்சியர் அறிவிப்பு
மண் சரிவுகளால் பாதிக்கப்பட்டிருந்த மலை ரயில் போக்குவரத்து இரண்டு நாட்களுக்கு பின்பு மீண்டும் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வங்கக் கடலில் வரும் 22-ந் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை கனமழை கொட்டித் தீர்த்தது.
திமுக அரசிடம் தொலைநோக்குப் பார்வை இல்லை என்றும் செய்யாத பணிகளை செய்து முடித்ததுபோல் மார்கெட்டிங் மட்டும்தான் நடக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னையை அடுத்த மணலி புதுநகரில் வடகிழக்கு பருவமழை பெய்து 3 நாட்களாகியு வடியாத மழை நீர்.
சென்னையில் கடந்த 3 நாட்களில்ப் 15 மண்டலத்திலும் 14 ஆயிரம் டன் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் அகற்றியுள்ளனர்.
தமிழக முதலமைச்சர் டீ கடையில் டீ குடிப்பதாலையோ, மைக்கை பிடித்துக்கொண்டு தங்களின் பெருமைகளை மட்டும் பேசுவதாலேயோ எதுவும் மாற போறதில்லை என்று சசிகலா குற்றம் சாட்டியுள்ளார்.
கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை நீக்கும் நடைமுறை ஜெயலலிதா காலம் முதலே இருப்பது தான் என்றும், ஒரு சிலரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதால் அதிமுக பிரிந்து கிடக்கிறது என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறு எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.