ICC International Test Ranking List 2024 : வங்கதேச தொடரில் சொதப்பிய கேப்டன் ரோகித் சர்மா 5 இடங்கள் சரிந்து 10வது இடத்திலும், விராட் கோலி 5 இடங்கள் சரிந்து 12வது இடத்திலும் உள்ளனர்.
Savukku Shankar Criticized CM Stalin : ''இது தனிநபருக்கு நடந்த கொடுமையாக பார்க்க கூடாது. ஊடக சுதந்திரத்திற்கு ஏற்பட்ட கொடுமையாக தான் பார்க்க வேண்டும். 5 மாதத்திற்கு பிறகு சிறையில் இருந்து வெளி வந்திருக்கிறேன்'' என்று சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.
CM Stalin Announced SP Balasubrahmanyam Salai : சென்னை நுங்கம்பாக்கத்தில் எஸ்பி பாலசுப்ரமணியம் வாழ்ந்த காம்தார் நகரை, ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’என பெயர் மாற்றம் செய்யக் கோரி, அவரது மகனும் பாடகருமான எஸ்பி சரண், முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார்.
திண்டுக்கல் அருகே செட்டிகுளக்கரையில் தீனதயாள வர்மன் என்ற ரவுடி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவர்மீது கொலை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
OTT Platforms Censor Issue in Madurai High Court : ஓடிடி தளத்தில் வெளியாகும் சினிமா, வெப் சீரியல்கள் போன்றவற்றை தணிக்கை செய்வது தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Chennai Rain Update : சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு இந்தியில் மட்டும் பெயர் வைத்ததன் மூலம் தமிழர்கள் மீது இந்தி திணிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மாரப்பன் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அரசு இதுதொடர்பாக பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பச்சையப்பன் கல்லூரியில் மாணவர் அமைப்பினர் மற்றும் ஆசிரியர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மெத்தப்படித்த அறிவாளியாக ஆளுநர் ஆர்.என்.ரவி இருக்கிறார். அதனால் உண்மைகள் மக்களுக்கு சொல்கிறார் என்று பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
படிக்காத நண்பர்களையும் திருத்தி, அவர்களையும் தேர்வில் வெற்றி பெற வைக்க ஒவ்வொரு மாணவர்களும் முயற்சி செய்ய வேண்டும் என அமைச்சர் அன்பில் அறிவுரை வழங்கியுள்ளார்.
''திமுகவின் வெற்றிக்கு இரண்டாவது காரணம் முதல்வர் மு.க.ஸ்டாலினின் புதுமைப்பெண், மகளிர் உரிமைத் தொகை, நான் முதல்வன், காலை உணவுத் திட்டம் போன்ற நலத்திட்டங்கள் தான்'' என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தலைநகர் சென்னையிலும் கடந்த சில நாட்களாக வெயிலின் கோரத்தாண்டவம் மிக அதிகமாக இருந்தது. வெயிலில் இருந்து விடுதலை கிடைக்காதா? என மக்கள் ஏங்கித் தவித்த நிலையில், சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டி வருகிறது.
மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று (செப். 24) மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று ( செப். 24) முதல் வருகின்ற 24ம் தேதி வரை வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 -40 கி.மீ வேகம்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
MDMK Vaiko on Tamil Nadu Fishermen Arrest : தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமைகளை நிலைநாட்ட புதியதாக பொறுப்பு ஏற்றுள்ள இலங்கை அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
Sri Lanka New Prime Minister Harini Amarasuriya : இலங்கையின் பிரதமராக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரியவை இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக நியமித்தார்.
Indian Soldiers on Israel Lebanon Attack : ஐக்கிய நாடுகளின் சார்பில் அமைதி காக்கும் ராணுவ படைகள் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த அமைதி படையில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் 600 பேர் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.