மயிலாடுதுறை மாவட்டம் அடியமங்கலம் கிராமத்தில், காதல் விவகாரம் தொடர்பாக இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலுக்கு எதிர்ப்பு
மயிலாடுதுறை அருகே அடியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் வைரமுத்து (28), இருசக்கர வாகன மெக்கானிக். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மாலினி (26) என்பவரை கடந்த 10 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு மாலினியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில், மாலினியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் இருதரப்பினரையும் அழைத்து விசாரித்தனர். அப்போது, வைரமுத்துவை திருமணம் செய்துகொள்வதாக மாலினி உறுதியாகத் தெரிவித்ததால், அவரை அவரது குடும்பத்தினர் நிராகரித்தனர். இதனால், மாலினி வைரமுத்துவின் வீட்டிற்குச் சென்றார். விரைவில் இருவருக்கும் பதிவுத் திருமணம் செய்து வைப்பதாக வைரமுத்துவின் பெற்றோர்கள் கூறிய நிலையில், மாலினி வேலைக்காக சென்னைக்குச் சென்றுள்ளார்.
மர்ம நபர்கள் வெட்டிக் கொலை
இந்த நிலையில், நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்த வைரமுத்துவை, மர்ம நபர்கள் வழிமறித்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய வைரமுத்துவை, அந்த நபர்கள் துரத்திச் சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். அவரது கழுத்து மற்றும் இரண்டு கைகளிலும் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டன.
உயிருக்கு போராடிய வைரமுத்துவை அவரது உறவினர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மேலும், அசம்பாவிதம் எதுவும் ஏற்படாதவாறு, கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
காதலியின் குடும்பத்தினர் மீது சந்தேகம்
காதலியின் குடும்பத்தினரே தங்கள் மகனைக் கொன்றுவிட்டதாக வைரமுத்துவின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். முன்னதாக, மாலினியின் தாயார் விஜயா, வைரமுத்துவை மிரட்டும் வகையில் பேசிய வீடியோ பதிவு ஒன்றை காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர். அதன் அடிப்படையில், காதலியின் குடும்பத்தினர் இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.