நேபாளத்தில் சமீபத்தில் நடந்த போராட்டங்கள், அந்நாட்டின் சுற்றுலாத் துறைக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. கோடைக்காலம் முடிந்து சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் நேரத்தில் வன்முறை நடந்ததால், நிறைய முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஊழலுக்கு எதிரான வன்முறைப் போராட்டத்தில் 72 பேர் இறந்தனர். இதனால் முன்னாள் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி பதவி விலகினார். அதன் பிறகு கடைகள் மீண்டும் திறக்கப்பட்டாலும், கத்மண்டுவில் உள்ள முக்கியமான சுற்றுலாப் பகுதிகள் ஆள் நடமாட்டம் வெறிச்சோடி காணப்படுகின்றன.
சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைந்தது
நேபாளத்தின் சுற்றுலாத் துறையினர், கடந்த ஆண்டைவிட சுற்றுலாப் பயணிகள் வருகை 30% குறைந்துள்ளதாகத் தெரிவித்தனர். இதனால், முன்பதிவுகள் ரத்தாகிவிட்டன.
மலையேற்றப் பயணங்களை ஏற்பாடு செய்யும் ராம் சந்திரா கிரி, “சுற்றுலாப் பயணிகள் யாரும் இல்லாததால் நான் சும்மா அமர்ந்திருக்கிறேன். செப்டம்பரில் பல குழுக்கள் தங்கள் முன்பதிவை ரத்து செய்துவிட்டன” என்று கூறினார். அதேபோல, ஒரு ஹோட்டல் உரிமையாளரான ரேணு பனியா, அடுத்த மாதத்திற்கான அனைத்து முன்பதிவுகளும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுவிட்டதாகக் கூறினார்.
வெளிநாட்டுப் பயண எச்சரிக்கை
நேபாளத்தின் நாடாளுமன்றம் எரிக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானது, பல நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால், அவர்கள் நேபாளத்திற்குச் செல்ல வேண்டாம் என்று தங்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கினர்.
நேபாளத்தின் மொத்த வருமானத்தில் கிட்டத்தட்ட 8% சுற்றுலா மூலம் கிடைக்கிறது. செப்டம்பர் முதல் டிசம்பர் வரை அங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நேபாள அரசு நம்பிக்கை
புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பிறகு, கத்மண்டுவில் இப்போது அமைதி திரும்பிவிட்டது. ஆனாலும், எரிந்த கட்டிடங்கள், வாகனங்களின் குப்பைகளை அதிகாரிகள் இன்னும் சுத்தம் செய்து வருகின்றனர். 2026-ஆம் ஆண்டில் தேர்தல் வரவுள்ள நிலையில், அரசாங்கத்தின் நிலைத்தன்மை கேள்விக்குறியாக உள்ளது. ஆனாலும், சுற்றுலாப் பயணிகள் மீண்டும் வருவார்கள் என நேபாள அதிகாரிகளும், வணிகர்களும் நம்புகிறார்கள்.