அரசியல்

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி.. அமித்ஷாவுடன் சந்திப்பா?

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி.. அமித்ஷாவுடன் சந்திப்பா?
Edappadi Palaniswami leaves for Delhi
அதிமுக கட்சியின் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். மேலும், அவருடன் கே.பி. முனுசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோரும் டெல்லிக்கு புறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமித் ஷாவுடன் சந்திப்பா?

முன்னதாக, எடப்பாடி பழனி​சாமி​யின் டெல்லி பயணம் குறித்​து, அதி​முக வெளி​யிட்ட அறிக்​கை​யில், “குடியரசு துணைத் தலை​வ​ராக தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்ள சி.பி.​ரா​தாகிருஷ்ணனை சந்​தித்து வாழ்த்​து​வதற்​காக எடப்பாடி பழனி​சாமி டெல்லி செல்​கிறார்” என தெரிவிக்கப்பட்டது. மேலும், அமித் ஷா உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவர்களையும் அவர் சந்திப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் குறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என்ற முறையில் பழனிசாமியும், அமித் ஷாவும் சந்திப்பது இயல்பானது” என்று தெரிவித்துள்ளார்.