Chennai Metro Rail Service in Krishna Jayanthi 2024 : கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சனிக்கிழமை கால அட்டவணைப்படி இன்று (ஆகஸ்ட் 26) மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Heavy Rain in Tamil Nadu : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஆகஸ்ட் 25) தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் இருந்து தன்னை பார்க்க சென்னைக்கு வந்த இளைஞரை திருமணம் செய்துக்கொள்ள முடியாது என கூறி மறுத்துள்ளார் இளம்பெண். இதனையடுத்து ’ஊருக்கு போறேன்’ என கூறி ஊருக்கு செல்லாமல் மீண்டும் மீண்டும் காதலி அலுவலகத்திற்கு சென்று இளைஞர் பிரச்சனை செய்ததால் பரபரப்பு. இறுதியில் என்ன செய்கிறோம் என்று அறியாமல் ஆத்திரத்தில் டெம்போ ட்ராவலரை திருடியதால் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
Chennai Meteorological Centre : தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஆகஸ்ட் 30ம் தேதி வரை ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Chennai Traffic : மூன்று நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி, தென் மாவட்ட மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பய்ணம் செய்ததால் சென்னையில் முக்கிய சாலைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தின் பெயர் பலகையில் ஏறியும், கூச்சலிட்டு பயணிகளுக்கு தொந்தரவு அளித்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போலீசாரிடம் கூண்டோடு சிக்கினர்.
சென்னையின் அடையாளங்களில் ஒன்று அண்ணாசாலை. இந்த பகுதியில் இரண்டு புகழ்பெற்ற இஸ்லாமிய வழிப்பாட்டு தளங்கள் உள்ளது. அதில் ஒன்று தான் ’தர்கா-இ-ஹஸ்ரத் சையத் மூசா ஷா காதரி’ தர்கா. இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது அனைத்து மதத்தினரையும் ஈர்க்கும் இந்த தர்கா உருவான கதை என்ன என்பதை சென்னை தின சிறப்பு கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்..
தமிழ்நாட்டின் மேல் நிலவும் வழிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இளைஞர்களின் கனவை சுமந்து கடலுக்கு எதிரே கம்பீரமாக அன்று முதல் இன்று வரை நின்றுக்கொண்டிருக்கும் சென்னை மாநிலக் கல்லூரியின் வரலாறு பற்றி விவரிக்கிறது இந்த சிறப்பு கட்டுரை
3ஆவது கணவரை தாலிக் கயிற்றால் இறுக்கி மனைவி கொலை செய்ததோடு, சிகிச்சைக்காக மருத்துவமனையின் அனுமதித்தது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து போலீசார் கைது செய்தனர்.
பல வண்ணங்களில் மிளிரும் வெளிச்சத்தில் இன்று பலரும் நின்று போட்டோ ஷூட் எடுக்கும் சென்னையின் நேப்பியர் பாலம், ஆங்கிலேயரால் ஒரு விசித்திரமான காரணத்திற்காக தான் கட்டப்பட்டது என்ற வரலாறு தெரியுமா? அது என்ன காரணம்..நேப்பியர் பாலத்தின் கதை என்ன என்பதை விவரிக்கிறது இந்த சென்னை தின சிறப்பு கட்டுரை...
சென்னையின் வரலாறு என்று எடுத்துக் கொண்டாலே சென்ட்ரல் ரயில் நிலையம், லைட் ஹவுஸ் போன்ற குறிப்பிட்ட சில கட்டடங்களின் கதைகளை மட்டுமே சென்னவாசிகள் கேட்டு வளர்ந்திருப்போம். ஆனால் எத்தனையோ வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்கள் இன்றளவும் சென்னையின் கதையை தினம் தினம் சொல்லிக் கொண்டிருக்கின்றன. அத்தகைய ஒரு சுவாரஸ்மிக்க கதையை சுமந்துக் கொண்டு வங்கக் கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது ”ஐஸ் ஹவுஸ்”.
இந்தியாவின் பண்டைய கால நகரங்கள் பல வீழ்ந்திருக்கின்றன… குக்கிராமங்கள் விரிவடைந்து பல பெரிய நகரங்கள் உருவாகியிருக்கின்றன… ஆனால் இன்றளவும் இந்தியாவின் மிகப்பெரிய நகரமாக கம்பீரமாக நிற்கிறது ‘சென்னை’… இங்குதான் இந்தியாவிலேயே முதல் முறையாக கட்டப்பட்ட கோட்டை உள்ளது… கிட்டத்தட்ட 385 ஆண்டுக்கால நினைவுகளை சுமந்துக் கொண்டு, வங்கக் கடலை வெறித்தப்படி, மிடுக்காகவும், தமிழ்நாட்டின் முக்கிய சட்டங்கள் நிறைவேற்றப்படும் இடமாகவும் விளங்கிக் கொண்டிருக்கிறது அந்த கோட்டை… அதுதான் கறுப்பர் நகரமான சென்னையின் முக்கிய புள்ளியாக இருக்கும் ”புனித ஜார்ஜ் கோட்டை”…
கடுமையான வெயிலால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள தமிழ்நாட்டு மக்களை குளிர்விக்கும் விதமாக தமிழ்நாட்டின் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சிதம்பரம் ரகசியம் போன்று நூற்றாண்டுகளாக வராலாற்றில் அவிழ்க்கப்படாத ஒரு புதிராக இருந்து வருவது சென்னைக்கு சத்ரபதி சிவாஜி வந்தாரா? இல்லையா? என்பது தான்... காரணம் சிவாஜி எதற்காக சென்னைக்கு வரபோகிறார்? அதுவும் சென்னையில் கைப்பற்றும் அளவிற்கு அப்படி என்ன சர்ச்சையோ அல்லது பொருளோ இருந்தது? என்ற கேள்விகள் எழாமல் இல்லை... அவற்றிற்கெல்லாம் விடையளிக்கும் விதமாக ஒரு முக்கிய சான்றாக திகழ்ந்துக் கொண்டிருக்கிறது ஒரு கோயில்... ’யாதுமாகி நின்றாய் காளி’ என்று பாரதியார் வழிப்பட்ட அந்த காளி குடியிருக்கும் பாரிஸ் கார்னரில் உள்ள ‘காளிகாம்பாள் கோயில்’...
''ராகேஷ் பால் தேச பக்தராகவும், அர்ப்பணிப்புள்ள தலைவராகவும் விளங்கினார். நாட்டுக்கு அவர் ஆற்றிய சேவை என்றென்றும் நினைவு கூறப்படும்'' என்று இந்திய கடலோர காவல் படை இரங்கல் தெரிவித்துள்ளது.