விளையாட்டு

CSK அணிக்கு மீண்டும் கேப்டனாகும் தோனி.. ருதுராஜ் நிலை என்ன?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CSK அணிக்கு மீண்டும் கேப்டனாகும் தோனி.. ருதுராஜ்  நிலை என்ன?
2025-ஆம் ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் ஐந்து போட்டிகளில் பங்கேற்ற சிஎஸ்கே அணி முதல் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. மீதமுள்ள நான்கு போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியடைந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

நாளை (ஏப்.10) நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. இந்நிலையில், காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால், மீதமுள்ள போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோனியை வழிநடத்துவார் என்று தலைமை பயிற்சியாளர் பிளமிங் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய பிளமிங், ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் சோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தில் ருதுராஜ் காயமடைந்தார் என்றும் இதனால் அவரது முழங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் அவர் போட்டியில் இருந்து விலகியுள்ளார் என்றும் தெரிவித்தார். மேலும், இடைப்பட்ட காலங்களில் அவர் எடுத்த முயற்சிகளை பாராட்டுகிறோம் என்றும் கூறினார்.