K U M U D A M   N E W S

ராமதாஸ்

அருள் நீக்கம்: அன்புமணிக்கு அதிகாரம் இல்லை- ராமதாஸ்

பாமகவில் நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது என ராமதாஸ் பேட்டி

பாமக எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து நீக்கம்.. அன்புமணி அதிரடி முடிவு

பாமக எம்எல்ஏ அருள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

டிசம்பருக்குள் புதிய மாவட்டங்கள் அமையுங்கள்.. அன்புமணி வலியுறுத்தல்

தமிழகத்தில் புதிய மாவட்டங்களை டிசம்பர் மாதத்திற்குள் அமைத்து முடிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மீனவர்கள் நலனில் முதல்வருக்கு அக்கறை இல்லை.. அன்புமணி குற்றச்சாட்டு

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தில் முதல்வர் கடிதம் எழுதுவதோடு நிறுத்திக்கொள்வதாகவும், மீனவர்கள் மீது அவருக்கு அக்கறை இல்லை என்றும் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

நிலத்தடி நீருக்கு வரி.. அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு

வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

முறைகேடுகளின் மறுபெயர் தான் திராவிட மாடல் அரசா?- அன்புமணி சரமாரி கேள்வி

கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு ஒப்பந்தப்புள்ளி விவகாரத்தில் மாநகராட்சிக்கே தெரியாமல் கட்டிக் கொடுத்தது யார்? என அரசுக்கு அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.

அமைச்சரின் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன?.. அன்புமணி கேள்வி

தமிழ்நாட்டில் தொழிற்துறை வளர்ச்சியடையவில்லை என்று அமைச்சரின் வாக்குமூலம் குறித்து முதலமைச்சரின் பதில் என்ன? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சாதிவாரி சர்வே என்றால் முதல்வருக்கு கசப்பது ஏன்? - அன்புமணி கேள்வி

தமிழ்நாட்டில் சாதிவாரி சர்வே உடனடியாக நடத்த வேண்டும் எனவும், சாதிவாரி சர்வே என்றால் முதல்வருக்கு கசப்பது ஏன்? எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்விஎழுப்பியுள்ளார்.

சமுதாயத்திற்கு, கட்சிக்கும் நான் துரோகம் செய்ய மாட்டேன் - அன்புமணி ராமதாஸ் பேச்சு

என்னுடைய கட்சிக்கும், என்னுடைய சமுதாயத்திற்கும், நான் துரோகம் செய்தால் அது தான் என்னுடைய வாழ்நாளில் கடைசி நாளாக இருக்கும் என அன்புமணி ராமதாஸ் உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

ராமதாஸ்-அன்புமணி மோதலுக்கிடையே செயற்குழு கூட்டம்..புதிய நிர்வாகி நியமனம்

தியாக தீபங்களான தந்தையரை எல்லா நாளும் வணங்குவோம் என அன்புமணி எக்ஸ் தளப்பக்கத்தில் தந்தையர் தின வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

தலைவிரித்தாடும் துப்பாக்கி கலாச்சாரம்.. அன்புமணி குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் தலைவிரித்தாடுவதைப் பார்க்கும் போது நாம் பாதுகாப்பாகத் தான் வாழ்கிறோமா? என்ற கேள்வி எழுவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தந்தை-மகன் மல்லுக்கட்டு தைலாபுரமா? பனையூரா? பாமகவில் க்ளைமேக்ஸ் காட்சி!

பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான அதிகாரப் போட்டி தற்போது செமி ஃபைனலை எட்டியிருக்கிறது. மகனின் ஆதரவாளர்களை ராமதாஸ் அதிரடியாக நீக்க, மாவட்டந்தோறும் பொதுக்குழுவை அறிவித்து மல்லுக்கட்ட அன்புமணி தயாராகி வருகிறார் . இருவருக்குமிடையிலான இறுதி யுத்தத்தில் வெல்லப்போவது யார்? என்பதுதான் தமிழக அரசியல் களம் உற்று நோக்குகி வருகிறது.

பாமக வழக்கறிஞர் பாலுவின் பதவி பறிப்பு – ராமதாஸ் அதிரடி அறிவிப்பு

பாமக சமூக நீதிப் பேரவை தலைவர் பொறுப்பில் இருந்து பாலுவை நீக்கி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

மாநில உரிமைக் காப்பதில் தமிழக அரசு படுதோல்வி- அன்புமணி விமர்சனம்

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி விவகாரத்தில் ஓராண்டு உறங்கி, கோட்டை விட்ட தமிழக அரசு மாநில உரிமைக் காப்பதில் படுதோல்வி அடைந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

5 ஆண்டுகளில் ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் சேதம்- அன்புமணி சரமாரி குற்றச்சாட்டு

கொள்முதல் நிலையங்கள், கிடங்குகளில் 5 ஆண்டுகளில் ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் சேதம் அடைந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்

அன்புமணிக்கு மீண்டும் தலைவர் பதவியா? – ராமதாஸ் பதில்

குருமூர்த்தி பேசியது தொடர்பாக ரகசியமாக காதில் கூறுகிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கிண்டல்

மாநில பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும்.. அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஐஐடி நுழைவுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு கடைசியிலிருந்து மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது என்றும், இதனால் மாநில பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

நான் தான் தலைவர் பாமகவுக்கு தலைவர் - அன்புமணி ராமதாஸ் திட்டவட்டம்

ராமதாஸ் தனது கொள்கை வழிகாட்டி மட்டுமல்ல - குலதெய்வம் என தெரிவித்துள்ள அன்புமணி, பாமகவுக்கு தானே தலைவர் எனவும் அறிவித்துள்ளார்.

திலகபாமா நீக்கமா? நீடிப்பாரா? யார் தான் பாமக பொருளாளர்? குழப்பத்தில் தொண்டர்கள்!

பாமக பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமா நீக்கப்பட்டதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்த நிலையில், பாமக பொருளாளராக திலகபாமா நீடிப்பார் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். நிறுவனரும், தலைவரும் மாறி, மாறி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், பாமகவின் தொண்டர்கள் யார் பக்கம் செல்வது என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மூத்த மொழி தமிழ் தான்- அன்புமணி ராமதாஸ்

மூத்த மொழி அன்னை தமிழ் தான். தமிழில் இருந்தும் தான் பிற திராவிட மொழிகள் பிறந்தன என்பது மொழி ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்ட உண்மை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடம்.. தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழ்நாடு மற்றும் அசாம் மாநிலங்களில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் தேதியினை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தூக்கமில்லை..மன உளைச்சல்.. மனமுடைந்து பேசிய அன்புமணி ராமதாஸ்

”என்னைப் பொறுத்தவரை நான் என்ன தப்பு பண்ணேனு எனக்கு தெரியல. எதனால் என்னை பதவியிலிருந்து நீக்கினார்கள்” என அன்புமணி ராமதாஸ் தொண்டர்கள் மத்தியில் மனமுடைந்து பேசியுள்ளார்.

பா.ம.க. சித்திரை முழுநிலவு பெருவிழா மாநாடு- ஏற்பாடுகள் தீவிரம்!

மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் பாமக சித்திரை முழு நிலவு மாநாடு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. 12 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் இம்மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இணைந்து பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்திரை முழு நிலவு மாநாடு...பாமகவுக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

மாநாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படும் என்று வடக்கு மண்டல ஐஜி-யிடம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என பாமகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பத்ம பூஷன் விருது பெற்ற அஜித்.. வாழ்த்து தெரிவித்த அன்புமணி ராமதாஸ்

மிக உயரிய விருதான பத்ம பூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.